திங்கள், 2 ஜூலை, 2012

Kochadaiyan வெற்றியடைகிறாரா? இல்லையா?

வழமைபோல் ஓவர் பில்டப் காவிக்கொண்டு வர இருக்கும் கோ சடையன் இன்னும் ஒரு ?????  என்று  கிசுகிசுக்கப்படுகிறது  உண்மையா?
ரஜினி நடித்துக்கொண்டிருக்கும் கோச்சடையான் படம் ஷூட்டிங் முடிந்து கடைசிகட்ட பணியில் இருக்கிறது. கோச்சடையான் படத்தை முடிக்க டெக்னீஷியன்கள் இரவு-பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார்களாம். வருகிற தீபாவளியன்று ரிலீஸாக இருந்த கோச்சடையான் திடீரென தள்ளிப்போனது. கோச்சடையான் தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ரிலீஸாக இருந்தது. கோச்சடையான் படத்தின் கதைப்படி ரஜினி தந்தை-மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை ரஜினிகாந்த், ஜாக்கி ஷரோஃப், நாசர் ஆகியவர்கள் நாட்டை ஆளும் ராஜாக்கள். மகன் ரஜினி தனது நாட்டின் (தந்தை ரஜினியின் நாட்டின்) இளவரசனாகவும், நடிகர் ஆதி ஜாக்கி ஷரோஃப் நாட்டின் தளபதியாகவும் நடிக்கின்றனர். ஜாக்கி ஷரோஃப் ரஜினியின் நாட்டின் மீது படையெடுத்து வந்து வெற்றியடைகிறாரா? இல்லையா? என்பது தான் கதையாம்.
படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டபடியால் கடைசிகட்ட பணிகளை 120 டெக்னீஷியன்களுடன் கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். கோச்சடையான் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் கொடைக்கானல் டூர், ஹீரோ ரஜினி கோயம்பத்தூர் விசிட் என ஓய்வில் இருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: