செவ்வாய், 3 ஜூலை, 2012

மழை வேண்டி மின்வாரியத்துறை யாகம்

திருப்பதியில் இன்று மின்சார வாரியத்தின் சார்பில் மழை வேண்டி வருண யாகம் தொடங்கப்பட்டது. யாகத்தில் தங்க மூர்த்திகளையும், கலசத்தையும் வேத பண்டிதர்கள் வேதம் ஓத ஊர்வலமாக யாக சாலைக்கு கொண்டு வந்தனர்.
சிர்ராஊர் ஸ்ரீராமசர்மா தலைமையில் அர்ச்சகர் குழு கலச பூஜை, லிங்கார்ச்சனையுடன் யாகத்தை தொடங்கினார்கள்.
இதுகுறித்து தென்மண்டல மின்வாரியத்துறை சேர்மன் வித்யாசாகர் ரெட்டி, "மழை இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், வேத பண்டிதர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, வருணயாகம் செய்ய முடிவு செய்தோம்'' என்று தெரிவித்தார்.
ம்ம்ம் இனி என்ன அப்படியே நம்ம நாடு வல்லரசாக வேண்டி சீக்கிரமா மகா யாகத்துக்கும் ஒரு டோக்கன் எடுத்துடுங்க ... விளங்கிடும்  

கருத்துகள் இல்லை: