வியாழன், 5 ஜூலை, 2012

காட்சி பொருளாகிறது மாணவர்களின் இலவச மடிக்கணினி

thangairaja - Dammam,சவுதி அரேபியா
2012-07-05 00:18:02 IST Report Abuse
கலைஞர் கொடுத்த டி வி யே பரவாயில்லைன்னு தோணுமே. ஆனா சொல்லத்தான் மனசு வராது. எத்தனையோ ஏழைகளின் குடிசைகளில் அந்த தொலைக்காட்சியின் அருமையை உணர்ந்து இருக்கிறார்கள்.

சென்னை :பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை பயன்படுத்துவது பற்றிய போதிய பயிற்சியின்மை காரணமாக, காட்சி பொருளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியை பயன்படுத்துவது குறித்து, பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை முழுவதும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, மடிக் கணினிகள் முறையாக பயன்படுத்த முடியாமல் உள்ளன. புறநகர் பகுதிகளில், மாணவர்களுக்கு மடிக்கணினி பயன்படுத்துவது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. மடிக்கணினி வழங்கும் போது, அதை எப்படி பயன்படுத்துவது என்ற வழிகாட்டு கையேடும், தமிழில் வழங்கப்படவில்லை. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வழிகாட்டு கையேட்டை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.


அலைபேசி நீட்சியாக...:தற்போது மடிக்கணினிகளை மாணவர்கள் அலைபேசியின் நீட்சியாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல வீடுகளில் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என அலைபேசியில் செய்த விஷயங்களை, தற்போது மடிக்கணினியில் செய்ய ஆரம்பித்துள்னர். கல்வி பயிற்சிக்கு பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது.

இது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:இலவசமாக வழங்கப்பட்ட மடிக்கணினியை எப்படி பயன்படுத்துவது மற்றும் என்னென்ன மாதிரியான தகவல்களை மடிக்கணினியில் பெற முடியும் என்கிற கையேடு தந்து இருக்கவேண்டும். அப்படி எந்த ஒரு கையேடும் மடிக்கணினியுடன் வழங்கப்படவில்லை. கணிப்பொறி பாடத்தை தவிர, மற்ற பாடங்களை தேர்வு செய்து படித்த மாணவர்களுக்கு, மடிக்கணினியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை.

பயிற்சி அவசியம்:மடிக்கணினி மூலம், ஆங்கிலம் உள்ளிட்ட புதிய மொழிகளை காதில் கேட்பதன் மூலமே கற்க முடியும் என்பதில் ஆரம்பித்து, அவரவர் விருப்பம் சார்ந்த துறையில் உள்ள தகவல்களை பெறுவது, கல்வி சார்ந்த சமீபத்திய தொழில்நுட்பங்களை சார்ந்த விஷயங்களை, பாடங்களை பதிவிறக்கம் செய்து படிப்பது உட்பட ஏராளமாக நல்ல வழிகள் குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இல்லையென்றால், மடிக்கணினிகள் அதிகம் பயன்படுத்த படாமல் போகும் அல்லது இதை இவர்களின் வீட்டில் உள்ளவர்கள் எப்படி பயன்படுத்துவது என்று கூறுவார்கள். அது நிச்சயம் மாணவர்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்காது.இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறினார்.

சிப்காட்டில் உள்ள ஐ.டி., :கம்பெனி கணினி பொறியாளர் உதயகுமார் கூறும் போது "போதிய பயிற்சி இல்லாமல் பயன்படுத்தினால் மடிக்கணினி விரைவில் பழுதடைந்து விடும். மடிக்கணினி குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அழைத்தால், எங்களில் சிலர் இலவசமாகவே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக இருக்கிறோம்' என்றார்

கருத்துகள் இல்லை: