திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய
அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றத்தால்
அமைக்கப்பட்ட ஐவர் குழு ஏற்றுக் கொண்டு ஒப்புதல் தெரிவித்திருப்பதாக
அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரள
சட்டப்பேரவையில் இன்று பேசிய உம்மன் சாண்டி, முல்லைப் பெரியாறில் புதிய
அணை கட்ட ஐவர் குழு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில்
உரிய அனுமதி பெற்ற பிறகு புதிய அணை கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில்
நடைபெறும் என்றார்.முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த ஐவர் குழுவானது பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகு அணை வலுவாகவே இருக்கிறது, புதிய அணை கட்டத் தேவையில்லை என்று கூறியிருந்தது.
இந்நிலையில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி இத்தகைய தகவலை கேரள பேரவையில் தெரிவித்திருப்பது மீண்டும் முல்லைப் பெரியாறு விவகாரத்தை கிளப்பிவிடுவதாகவே அமையக் கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக