திங்கள், 5 டிசம்பர், 2011

வாடகைத்தாய் மூலம் ஆமிர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்தது


Aamir Khan with Kiran Rao
வாடகைத்தாய் மூலம் ஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நீண்ட காலத்திற்குப் பிறந்துள்ள இந்தக் குழந்தை எங்களுக்கு மிகவும் விசேஷமானது, சிறப்பானது என்று ஆமிர்கான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆமிருக்கு தற்போது 46 வயதாகிறது என்பது நினைவிருக்கலாம்.
ஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு திருமணமாகி பல காலமாகியும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற ஆமிர்கான்-கிரண் முடிவு செய்தனர். அதன்பிட செயற்கை முறையில் கருத்தரிப்பு நடத்தப்பட்டு வாடகைத்தாயின் கருவறையில் ஆமிர்கான் தம்பதியின் குழந்தை வளர்ந்து வந்தது. தற்போது அழகான ஆண் குழந்தையை அந்த வாடகைத்தாய் பெற்றுள்ளார்.இதுகுறித்து ஆமிர்கான் கூறுகையில், கடவுளின் அருள், அறிவியலின் அற்புதம், எங்களது குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு, அன்பு ஆகியவற்றுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்த, எங்களின் உணர்வுகளை மதித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறோம் என்றார் ஆமிர்.

டிசம்பர் 1ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

ஆமிர்கானுக்கும், கிரண் ராவுக்கும் 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் 2009ல் கிரண் கருத்தரித்தார். ஆனால் அது அபார்ஷன் ஆகி விட்டது. ஆமிர்கானைப் பொறுத்தவரை இது 3வது குழந்தையாகும். ஏற்கனவே தனது முதல் திருமணம் மூலம் ஆமிருக்கு 2 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: