வியாழன், 8 டிசம்பர், 2011

Dam டேம் 999 இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Dam 999
டெல்லி: டேம் 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து திரைப்படத்தின் இயக்குநர் சோகன் ராய் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏன் இந்தப் படத்தைத் தடை செய்யக் கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு சோஹன் ராய்க்கு உத்தரவிட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி டேம் 999 என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான சோஹன் ராய் என்பவர் படம் எடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து படத்தைத் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். மேலும் தமிழக அரசும் படத்தைத் திரையிட தடை விதித்தது. இதை எதிர்த்து சோஹன் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தப் படத்தை ஏன் தடை செய்யக் கூடாது என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு சோஹன் ராய்க்கு உத்தரவிட்டனர்.

மேலும் இந்தப் படத்தை ஏன் வெளியிடக் கூடாது என்பது குறித்து தமிழக அரசும் தனது விளக்கத்தை வருகிற 16ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: