வியாழன், 8 டிசம்பர், 2011

மம்முட்டி, மோகன்லால் சென்னையில் பல ஆண்டு களாக


மலையாள நடிகர்கள் நாவடக்கி பேசகற்றுக் கொள்ள வேண்டும் : 
நடிகர்கள் நாவடக்கி பேச கற்றுக் கொள்ள வேண்டும். மக்களின் உணர்வுகளை உணர்ந்து பேச வேண்டும். சென்னையில் பல ஆண்டு களாக மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள்நிம்மதியாக வாழ்ந்து வருவதை நினைத்துப் பார்க்க வேண்டும்.யுவராஜா
 முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து, கம்பத்தில் நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நேற்று தேனி வந்தார்.
அங்கு முல்லைப் பெரியாறு அணையில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் துவக்கினார். பின்னர் யுவராஜா கம்பம் புறப்பட்டார். 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் யுவராஜா உள்பட 50 பேரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

அப்போது, யுவராஜா செய்தியாளர்களிடம்,’முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கையெழுத்து இயக்கத்தை சென்னையில் துவக்கி வைத்தார். கையெழுத்து இயக்கம் நடத்த கம்பம் சென்ற என்னை போலீசார் தடுத்து கைது செய்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கேரளாவில் இளைஞர் காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.
வன்முறையில் ஈடுபட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராகுலிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணு நாத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என மலையாள நடிகர்கள் கூறியுள்ளனர்.


ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் கேரள மாநில அரசு தவறி விட்டது. முல்லைப்பெரியாறு அணைவிவகாரத்தில் தீர்வு காண இருமாநில முதல்வர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயாராக இருந்தார்.

தமிழக முதல்வர் பேச்சுவார்த்தையை தவிர்த்து விட்டார். உச்சநீதிமன்றமே இது விஷயத்தில்இருமாநில முதல்வர்களும் பேசி பிரச்சனை இல்லாமல் நடந்து கொள்ள அறிவுறுத்தி உள்ளது. எனவே, தமிழக முதல்வரும், கேரள முதல்வரும் இவ்விஷயத்தில் பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை: