ஞாயிறு, 4 டிசம்பர், 2011

என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு!

Viruvirupu

New Delhi, India: The Supreme Court yesterday (Tuesday) asked Tamil Nadu government “What is happening in the state? Is there any rule of law in the state? There should be some rule of law.” This remark came on the case for sacking 15,000 panchayat workers appointed by the previous DMK government.“Exactly five years ago they are appointed. Then they are removed. Then after next five years another government comes and makes the appointment,” Supreme Court bench of justices D K Jain and A R Dave remarked.

தமிழக அரசு விரும்பத்தகாத விமர்சனம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டிடமிருந்து கேட்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது மக்கள் நலப் பணியாளர்கள் 15,000 பேரை பணி நீக்கம் செய்து நவம்பர் 8-ம் தேதி தமிழக அரசு இட்ட உத்தரவு.
இந்த விஷயத்தில் தேவையில்லாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்றது தமிழக அரசுதான். போன இடத்தில் பொல்லாப்பும் வாங்கியிருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஏ.ஆர். தேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னால் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. “இவர்களை (மக்கள் நலப் பணியாளர்கள்) ஒரு அரசு நியமிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் மற்றொரு அரசு, அவர்களை வீட்டுக்கு அனுப்புகிறது. பின்னர் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம், பணியாளர்களை நீக்குவதும், பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கும் சம்பவமும் நடைபெறுகிறது. தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? அங்கு சட்ட ரீதியான ஆட்சிதான் நடைபெறுகிறதா? அங்குள்ள ஆட்சியாளர்கள் சட்டத்தை சிறிதளவாவது மதிக்க தெரிந்துகொள்ள வேண்டும்” என்று மிகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தனர் நீதிபதிகள்.
இந்த வழக்கின் பின்னணி என்ன?
தமிழக அரசு மக்கள் நலப் பணியாளர்கள் 15,000 பேரை பணி நீக்கம் செய்தபோது, அவர்களது சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை விசாரித்துவிட்டு, அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதைச் செய்ய தமிழக அரசு விரும்பவில்லை.
மீண்டும் பணி வழங்குவதைத் தவிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து டில்லி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சிறப்பு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
அந்த மனு மீதான விசாரணையின்போதுதான் தமிழக அரசு இப்படி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது!
தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் குருகிருஷ்ணகுமார், ஏற்கனவே போதியளவு பணியாளர்கள் இருக்கும் நிலையில் இந்தப் பணியாளர்களையும் வைத்திருப்பது அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றது என்று வாதாடியதை, சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகமே!
தி.மு.க. கொண்டுவந்த ஒவ்வொரு திட்டத்திலும் கையை வைத்து, விரலைச் சுட்டுக் கொள்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!

கருத்துகள் இல்லை: