ஞாயிறு, 4 டிசம்பர், 2011

உணர்வுகளை அவமதிக்கும் வகையில் உள்ளது கொலை வெறிப் பாடல்- ஜாவேத் அக்தர்

Javed Akhtar and Danush
மும்பை: வைரஸ் போல இணையதளங்கள் மூலம் படு வேகமாக பரவி வரும் தனுஷ் எழுதி, அவரே பாடிய கொலை வெறிப் பாடலுக்கு பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாடல் என்று அவர் சாடியுள்ளார்.
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி ... இந்தப் பாடல்தான் இன்றைய இளைஞர்களின் வாய் முழுக்க நர்த்தனமாடி வரும் பாடல். தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து குழைத்து உருவாக்கப்பட்டுள்ள பாடல் பட்டி தொட்டி மற்றும் இன்டர்நெட்டில் பிரபலமாகி விட்டது. ரஜினிக்கும் கூட இந்தப் பாடல் பிடித்துப் போய் பாடலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம்.ஆனால் இந்தப் பாடலை ஜாவேத் அக்தர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில், இளைஞர்களின் இந்த புதிய தேசிய கீதம் மிகச் சாதாரணமாக உள்ளது, பொருத்தமற்றதாக உள்ளது.

அனைவருமே இந்தப் பாடலை புகழ்கிறார்கள். ஆனால் மன்னர் நிர்வாணமாக நிற்கிறார். மிகச் சாதாரணமான ட்யூன், தரமே இல்லாத பாடல், மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகள்.

இந்தப் பாடலின் வெற்றி நான் இதுகாலம் வரை எழுதிய அத்தனை பாடல்களும் குப்பை, உபயோகப்படாதது, உருப்படியில்லாதது என்பது போலாகி விட்டது. இதில் எந்தவிதமான லாஜிக்குமே இல்லை என்று கூறியுள்ளார் அக்தர்.

அக்தரின் இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து நிறைய பேர் கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: