சனி, 3 ஏப்ரல், 2021

பாசிசத்தின் அடையாள புருஷர்கள் புலம் பெயர் புலிப்பினாமிகள்

இன்று தமிழ்நாடு மிகப்பெரும் ஆபத்தில் சிக்கி கொண்டுள்ளது .
இது பற்றி எந்த புரிதலும் அற்ற புலி பினாமி கூட்டம் உலகம் முழுவதும்  பரவி உள்ளது.
இவர்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை
தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள சகல வாய்ப்புக்களையும் பயன்படுத்தி சொகுசாக இருந்து கொண்டு வெறும் பொழுது போக்கு அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் குடிக்கும் சாராயத்திற்கு ஊறுகாயாக சீமான்களும் சங்கிகளும் கூறுவதை மட்டும் கேட்டுக்கொண்டு பொழுது போக்குகிறார்கள்
இவர்களுக்கு மக்களை பற்றிய எந்த அக்கறையும் கிடையாது .
தமிழகம் மட்டுமல்ல இலங்கையிலும் உள்ள மக்கள் பற்றியும் கூட எள்ளளவு கவலையும் கிடையாது  ஆனால் கவலை இருப்பது நடிப்பதில் மட்டும் இவர்கள் வல்லவர்கள். சிறு சிறு லிப் சர்வீஸ்கள்!
இவர்களின் பேரறிவுக்கு சீமான். நரேந்திர மோடி போன்றவர்கள்தான் தலையாய வழிகாட்டிகளாக தெரிகிறார்கள்   
இவர்களுக்கு கொடுக்கப்படட நிகழ்ச்சி நிரல் ஒன்றே ஒன்றுதான்
எப்படியாவது திமுக மீது எந்த சேற்றையும் வாரி வீசுங்கள் என்பதுதான் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கட்டளை .
அதை மட்டுமே இவர்கள் செய்கிறார்கள்.


இவர்கள் எந்த காலத்திலும் சமூகநீதிக்கு சுயமரியாதைக்கு எதிரானவர்கள்தான்.
ஒரு அசல் பாசிஸ்டுகள் எப்படி இருப்பார்கள் என்பதை ஹிட்லர்கள் பொல்போட்டுக்கள் இல்லாத இக்காலத்தில் இவர்களே பாசிசத்தின் அசல் காட்சி பொருட்களாக காட்சி அளிக்கிறார்கள்.
ஒரு நிகழ்கால பாசிசத்தின் அடிமை உதாரண புருஷர்களாக இவர்கள் உள்ளார்கள்.....

வி. சபேசன் : பொட்டு அம்மான் பற்றி சீமான் பேசிய ஒலிப்பதிவு போலியானது என்று நாம் தமிழர்கள் தம்பிகள் சிலர் வாதிடுகிறார்கள். ஒரு காலத்தில் எம்மோடு இருந்தவர் என்கின்ற அன்பினால் சீமானுக்கு ஆதரவாக நான் எழுதிய பதிவிலும் வந்து, ஒலிப்பதிவு பொய்யானது என்று சண்டை பிடிக்கிறார்கள். திமுகவே இப்படி ஒரு பொய்யான ஒலிப்பதிவை தயாரித்தது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.உண்மையில் திமுக சீமானை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட சீமானைப் பற்றி பேசுகிறார்கள் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவதிலேயே திமுக தனது முழுக் கவனத்தையும் செலுத்துகிறது. சம்பந்தப்பட்ட ஒலிப்பதிவு உண்மையானது. அந்தக் குரல் சீமானுடையதுதான். போதை தெளியாத ஒரு நேரத்தில் வந்த எரிச்சலை தரக்கூடிய ஒரு தொலைபேசி அழைப்பில் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் சீமான் பேசி விட்டார் என்பதுதான் உண்மை.

சீமான்தான் பேசினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கக்கூடும். ஆதாரம் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் சீமானை வைத்துக் கொண்டு தம்பிகளின் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் தடா சந்திரசேகர் பேசியதுதான் ஆதாரம்.
'நாங்கள் எப்படி கட்சி நடத்த வேண்டும் என்பதை வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்கள் சொல்லித் தராதீர்கள், நீங்கள் தோற்றுப் போய் விட்டீர்கள், எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்' என்பதை ஈழத் தமிழர்களுக்கு உறைக்கும்படி 'நீ யாருடா எனக்கு சொல்ல, நீ சண்டை போட்டே, முடியலை இல்ல, எமக்குத் தெரியுண்டா என்ன செய்யணும்டு' என்று ஒரு அரை மணித்தியாலங்கள் தடா சந்திரசேகர் பொரிந்து தள்ளி விட்டார்.
அடுத்த நாள் தடா சந்திரசேர் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டார். மாவீரன் பிரபாகரனின் காதுகுத்து விழா சிறப்பாக நடைபெற்றது. இப்படியாக சில மாதங்கள் ஓடி விட்டன. அதனால் பலர் இந்த சம்பவத்தை மறந்து விட்டார்கள். சீமானின் மனதுக்குள் இருந்ததைத்தான் அன்றைக்கு தடா சந்திரசேகர் பேசினார். இன்றைக்கு சீமானும் போதையில் இன்னும் கடுமையாக சொல்லி விட்டார்.
மாத மாதம் பணம் அனுப்பும் உரிமையில் சீமானுக்கு தாம் வழிகாட்டலாம் என்று சில ஈழத் தமிழர்கள் நினைக்கக் கூடும். ஆனால் பிரபாகரனிசத்தையும் தாண்டி சீமானிசம் என்கின்ற மாபெரும் தத்துவத்தை தான் உருவாக்கி இருப்பதாக நம்பும் சீமானிடம் இதெல்லாம் எடுபடாது. அடுத்த முறை சீமானுக்கு தொலைபேசும் ஈழத் தமிழர்கள் தயவு செய்து பிரபாகரனின் பெயரை சொல்லாமல் இருப்பார்களாக!

1 கருத்து:

Unknown சொன்னது…

பொய் சொல்வதற்கு ஒரு அளவே இல்லையா