திங்கள், 29 மார்ச், 2021

7 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு தடை ! இலங்கை அரசு அறிவிப்பு!

Vinoth Balachandran : வெளிநாடுகளில் இயங்கும் 7 - தமிழ் அமைப்புகளுக்கும் 388 தனி நபர்களுக்கும் அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1968ம் ஆண்டின் 45ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தினை பயன்படுத்தி,  2012ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி வெளியிடப்பட்ட 1758/19 வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய, 2016ம் ஆண்டு திருத்தி வெளியிடப்பட்ட (1992/25) வர்த்தமானியில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயல்களைப் புரிகின்ற, புரிய எத்தனிக்கின்ற, அதில் பங்கேற்கின்ற, அவற்றை புரிய வசதியளிக்கின்ற போன்ற காரணங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட அமைப்புக்களும், தனிநபர்களும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
தடைவிதிக்கப்பட்ட அமைப்புக்கள் -
பிரித்தனியா தமிழர் பேரவை
கனடிய தமிழ் காங்கிரஸ்
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
உலகத் தமிழர் பேரவை
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்
தமிழ் இளையோர் அமைப்பு
உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
வர்த்தமானியை முழுமையாக படிக்கவும், தடை செய்யப்பட்டுள்ள தனி நபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளவும் கீழுள்ள லிங்கை பார்வையிடவும்.
http://www.documents.gov.lk/files/egz/2021/2/2216-37_T.pdf
குறித்த அமைப்புகளின் அல்லது நபர்களின் இலங்கையிலுள்ள சொத்துக்களை, நிதிகளையும் செயல்பாடுகளையும் சட்டப்படி முடக்குவதற்கு அரசுக்கு முடியும் என்பதுடன் குறித்த அமைப்புக்களுடனும் தனி நபர்களுடனும் தொடர்பில் இருந்து இலங்கையில் செயல்படும் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டத்தினால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைவாக புலம்பெயர் தேசத்தில் இயங்கும் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களின் பெயர்பட்டியல் ஒன்று இலங்கைக்கு வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் மேலும் பல அமைப்புக்களும், தனி தபர்களும் தடைசெய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: