ஞாயிறு, 28 மார்ச், 2021

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் - 5வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

.thanthitv.com :  எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் நீர் வழிதடத்தில், சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில், மோதி சிக்கிக் கொண்டது. 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட கப்பலை மீட்கும் பணி 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 இழுவைப் படகுகளும், இரண்டு அகழ்வு எந்திரங்களும் கொண்டு கப்பலை மீட்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூயஸ் கால்வாயின் தெற்கு முனையில், காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை, பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

கருத்துகள் இல்லை: