செவ்வாய், 30 மார்ச், 2021

மோசடி வழக்கில் கர்நாடகா இராம சேனை நிறுவனர் கைது,

Muthu Selvan : தமிழ்நாட்டு   வாக்காளர்களே! நீங்கள் அதிமுக+பீஜேபீ+ பாமக

கூட்டணிக்கு அளிக்கும் வாக்குகள் இத்தகைய கயவர்களுக்கு விரிக்கும் சிகப்புக் கம்பளம்!
மோசடி வழக்கில் இராம சேனை நிறுவனர் கைது,
மங்களூரு, கருநாடகம் 40 அகவை நிரம்பிய பிரசாத் அத்தாவர் என்பவர் 'இராம சேனை' என்னும் பெயரில் ஒரு சங் பரிவாரத் துணை அமைப்பை நிறுவி உள்ளார்.
இந்த அமைப்பின் தொண்டர்கள் அல்லது குண்டர்கள்  இந்துத்துவ வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள்.
மங்களூர்ப் பகுதியில் அந்த அமைப்பின் வெறியாட்டத்தை அனைவரும்  அறிவர்.

மங்களூரில் ஒரு மது குடிப்பகத்தைத் தாக்கிய வழக்கும் அவர் மீது உண்டு.
ஒரு பேராசிரியர் ஒருவருக்கு ராய்ச்சூர் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, முப்பது லட்ச ரூபாய்க்குப்.பேரம் பேசியுள்ளார்.
பேசிய தொகையில் 17.5 லட்சம் ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டு எஞ்சிய தொகைக்கு தொகை குறிப்பிடாத காசோலைகளை மிரட்டி வாங்கி உள்ளார்.
பேராசிரியர் ஜெயசங்கர் மங்களூர்ப்.பல்கலைக் கழகத்தில் நுண் உயிரியல் பேராசிரியராகவும் கல்லூரி வளர்ச்சிக் குழு இயக்குநராகவும் பணியாற்றுபவர். அவருக்குத் துணைவேந்தர் பதவி ஆசை காட்டி, இராம சேனை நிறுவனர் ஏய்த்துள்ளார்.
தனக்குப் பல அரசியல் பெருமக்கள் நெருக்கமானர்கள் என்றும் தன்னால் அவர்கள் உதவியுடன் எப்படிப்பட்ட வேலையைதும் வாங்கித தர முடியும் என்றும் கூறி, அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஒளிப்படங்களை அத்தாவர் காட்டி.மயக்கி உள்ளார். 

அவர் காட்டிய படங்களில், கருநாடக முதல்வர் எடியூரப்பா, அவருடைய மகனும்மாநில பிஜேபி துணைத்தலைவருமான விஜேந்திரா, நளின் குமார் கட்டீல் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இருந்துள்ளனர்
வேலை கிடைக்காத நிலையில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட பேராசியரைக் கொலை செய்து விடுவதாக அத்தாவர் மிரட்டி உள்ளார். பேராசிரியர் அளித்த குற்றச்சாட்டின் மேல் அத்தாவரை மங்களூர்க் காவல்துறை கைது செய்துள்ளது

கருத்துகள் இல்லை: