வெள்ளி, 2 ஏப்ரல், 2021

உத்தரப் பிரதேசம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இந்தியாவில் நம்பர்- 1 மாநிலமாக திகழ்கின்றது

May be an image of 1 person

திரு.ி.லஜபதி ராய் Lajapathi Roy , Senior Advocate. திருவாளர் ஆதித்யநாத்தும் சட்டத்தின் ஆட்சியும் .! 

மாணவர்களுக்கு பெற்றோர் அறிவுரை கூறும்போது பக்கத்து வீட்டில் நன்றாகப் படிக்கும் மாணவனைப் போல படி என உதாரணம் கூறுவது வழக்கம் அதை விடுத்து மூன்றாம் வீட்டில் படிக்காமல் கத்தியையும் கல்லையும் தூக்கிக்கொண்டு பொறுக்கித்தனம் செய்து கொண்டு திரியும் மாணவனைப்போல நீயும் பொறுக்கியாக மாறு என யாரும் அறிவுரை கூறுவதில்லை , 

அப்படிக் கூறினால் ஊரே சிரிக்கும். அதைப்போல இருக்கிறது  திருமிகு வானதி அவர்களுக்காக கோயம்புத்தூரில் பிரச்சாரம் செய்ய இறக்குமதி செய்யப்பட்ட திருவாளர் ஆதித்யநாத் அவர்களின் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனவும் உத்தரப் பிரதேச ஆட்சியைப் போன்ற ஆட்சி வேண்டுமானால் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கூறிய அவரது பேச்சு.    09.01.2020 நாள் இந்துப் பத்திரிகை

2019 ஆம் ஆண்டின் தேசிய குற்றப் பதிவேட்டுத்துறையின்(National Crimes Records Bureau) அறிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உத்தரபிரதேசம் முன்னணியில் இருக்கிறது எனக் குறிப்பிட்டது .
அதன்படி போக்ஸ்கோ (POCSCO) எனும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் நம்பர்- 1 மாநிலமாக திகழ்கின்றது உத்தரப் பிரதேசம்
2018- 2019 ஆண்டில் அங்கு அக் குற்றங்களின் எண்ணிக்கை 7444.
வன்புணர்ச்சி குற்றங்களிலும் முதலிடம் உத்தரப் பிரதேசத்திற்கே அங்கு வழக்குகள் எண்ணிக்கை 3065.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்கள் மீதான 150 ஆசிட் தாக்குதல்களில் 42 நிகழ்வுகள் நடந்தது உத்தரப்பிரதேசத்தில்.
அங்கு பதிவான வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 45935 அதற்கு முந்தைய வருடத்தை விட 7.3 விழுக்காடு அதிகம்.
பட்டியல் சமூக மக்கள் மீதான வழக்குகள் 11829 என்ற எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகம்.
இது தவிர சமூகக்குறியீடுகளில் இந்தியாவில் கடைசி இடம் எல்லா மாநிலங்களின் வரி வருவாயை விழுங்கும் உத்தர பிரதேசத்திற்கு.
அங்கு ஆரம்பக் கல்வியையே அளிக்க இயலாத , மக்கள் தொகையை குறைக்காத , பெண்களுக்கு, பட்டியல் சமூக மக்களுக்கு, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற உத்தரப் பிரதேசத்தை போல திரு ஆதித்யநாத் கூறுவது குரங்கிற்கு தன் மணம் நறுமணம் என்பதைப் போல இருக்கிறது.
ஏற்கனவே நீட்டுக்கு முன்னர் 2015 ஆம் ஆண்டில் சுகாதாரத்தில் மூன்றாம் இடத்திலிருந்த தமிழகத்தை வெற்றி நடை போட்டு 2020 ஆம் ஆண்டில் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளிய பெருமைக்குரிய சிறப்புமிக்க மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
தமிழகத்தை உத்தரப்பிரதேசமாக்க திரு ஆதித்யநாத்தை கூட்டுக்கு அழைப்பது கழுதை கட்டி உழவுக்கு இழுத்த கதையாக உள்ளது.
மதுரை -20 தி.லஜபதி ராய்
01.04.2021

கருத்துகள் இல்லை: