திங்கள், 5 அக்டோபர், 2020

ஆதி திராவிடர்களை யார் வஞ்சிக்கிறார்கள் என்று ரவிக்குமார் MP குறிப்பிடுவது அவசியம். . ரவிக்குமாருக்கு ரவிசங்கரின் கேள்விகள் !

Ravishankar Ayyakkannu : மதிப்பிற்குரிய திரு. ரவிக்குமார் MP அவர்களே,
1. இங்கு நீங்கள் ஆதி திராவிடர்கள் என்று குறிப்பிடுவது

* அனைத்து SC சாதிகளையுமா
* தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர் தவிர்த்த பறையர் உள்ளிட்ட 60 சாதிகளா?
* மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆதி திராவிடர் என்று குறிப்பிடப்படும் சாதியா?
அனைத்து SC சாதிகளையும் குறிப்பிடாத பட்சத்தில்,
உங்கள் செயற்பாட்டை ஏன் சாதி ரீதியான அணி திரட்டல் என்று பார்க்கக் கூடாது?
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்காக நீதிபதி ஜனார்த்தனம் அளித்த அறிக்கையின் படி,
ஏற்கனவே அருந்ததியர் அல்லாத SC சாதிகள் தான் தங்கள் மக்கள் தொகைக்குக் கூடுதலாக படிப்பு, அரசு வேலை வாய்ப்புகளில் SC
இட ஒதுக்கீட்டீன் மூலம் இடம் பிடிக்கின்றனர் என்று அறிய முடிகிறது.
ஆகவே, நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு உரிய ஆதாரத்தை வழங்க வேண்டுகிறேன். link 1     
2. 1950களில் இருந்தே SC, ST இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. IAS, IPS போன்ற பொறுப்புகளில் உள்ள OBC மக்களை விட SC, ST மக்கள் அதிகம். செயலாளர் அளவில் கூட SC, ST மக்கள் பெயரளவுக்கு ஓரிருவராவது உள்ளனர். OBC யாரும் இல்லை. https://theprint.in/india/governance/of-89-secretaries-in-modi-govt-there-are-just-3-sts-1-dalit-and-no-obcs/271543/?fbclid=IwAR3ZOSGz3iYgmVDxwXl8Rw85Tdwt_RyqhQHkC5zWwpB0dVEl3NXP-V-0qnA
IAS என்பது மத்திய அரசு பதவி.
ஆகவே, ஆதி திராவிடர்களை யார் வஞ்சிக்கிறார்கள் என்று தெளிவாக நீங்கள் குறிப்பிடுவது அவசியம்.
3. ஒவ்வொரு IAS அதிகாரியும் தன் பணிக்காலத்தின் தொடக்கத்திலும் பல ஆண்டுகளாகவும் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார்.
ஆகவே, மாவட்ட ஆட்சியர்கள் யாரும் குறிப்பிட்ட சாதியில் இருந்து இல்லை என்று நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு நடைமுறைக்கு முரணாக உள்ளது.
(ஆதாரங்கள் 


1 கருத்து:

Unknown சொன்னது…

ரவிசங்கர் சொல்வது சரியே எனக் கருதுகிறேன்!ஆனாலும் இட ஒதுக்கீடு பெயரளவில் தான்.முழுமையாக இல்லை!!