சனி, 10 அக்டோபர், 2020

டெலோ போராளி ரத்தியின் உடலை அவித்து எலும்பை எடுத்த ஆசிரியர் ... Anatomy பரிசோதனை கூடத்திற்கு .. புலிகளின் கொடூர வரலாறு ....

Arun Ambalavanar : சிவத்தாரும் சக்கரும் சீரழிந்த யாழ் சிவில்/சனநாயக


விழுமியங்கள் சம்பவம்01.    1986 ஏப்பிரலில் புலிகள் ரெலோ மீது தாக்குதல் மேற்கொண்டு நூற்றுக்கணக்கான ரெலோ தமிழ் போராளிகளை சுட்டும் எரித்தும் கொன்றார்கள். அப்போது கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி அதிபராக இருந்தவர் சிவபாதசுந்தரம்( சிவத்தார்) என்ற பிரபல்யமான உயிரியல் ஆசிரியர். 

அவரது பாடசாலை ஆய்வுகூடத்தில் மனித எலும்புக்கூடு இல்லை. மாணவர்களுக்கு இலகுவாக Anatomy படிப்பிக்க சிவத்தார் ஒரு எலும்புக்கூடு எடுக்க அவாகொண்டு புலிகளிடம் தனக்கு ஒரு மனித எலும்புக்கூடு எடுக்க உதவுமாறு கேட்டுக் கொண்டிருந்தார் ஒரு மனிச சடலத்தை தாருங்கள். மிகுதியை நான் பார்த்துக்கொள்வேன்" என்ற அவரது ஆய்க்கினையால் இறுதியில் புலிகள் அவரிடம் தங்களால் கொல்லப்பட்ட அதே கரவெட்டியைச்சேர்ந்த ரத்தி என்கிற(கோயிற்சந்தை/அரசடி/அந்திரான் பகுதிகள்) ரெலோ போராளியின் சடலத்தை கொணர்ந்து கொடுத்தார்கள். 

அசல் மனித எலும்புக்கூடுகளை மனித பிணத்திலிருந்து சரிக்கட்டுவது மிகச்சிரமமான காரியம். சட்ட மனிதாபிமான பிரச்சனைகளைக்கப்பால் அதுவொரு நாலு கட்ட நீண்ட பயங்கரமான மயான காண்டம். இதனால்தான் மேலைத்தேய நாடுகள் அப்போதே ஆய்வு கூடங்களில் செயற்கையான பிளாஸ்ரிக், மர எலும்புக்கூடுகளை பயன்படுத்த தொடங்கியிருந்தன. அவ்விரவு அதிபர் தன் பாடசாலையில் நிறை தண்ணியில் சில மாணவ உதவியாளர்களோடு ஒரு பெரிய கிடாரத்தில் ரத்தி என்கிற போராளியின் சுட்டுக்கொல்லப்பட்ட உடலை நிர்வாணமாக்கி போட்டு அவித்தார். 

இறுதி மனித எலும்புக்கூடு ஒரிரவில் பெற்றுக் கொள்ளக்கூடியதல்ல. பல நாட்களுக்குப்பிறகு சிவத்தாரின் "ஆசை" நிறைவேறியது. 1986ம் ஆண்டா 1987ம் ஆண்டா எனக்கு நினைவில்லை. அவ்வாண்டு விக்னேஸ்வராக் கல்லூரியில் நடந்த கண்காட்சியில் சிவத்தார் தனது "சாதனை"யான ரத்தியின் எலும்புக்கூட்டுக்கு முன்னால் அமர்ந்திருந்து மிகப்பெருமையாக கண்காட்சிக்கு வந்தவர்களின் கேள்விகளுக்கு விடைகொடுத்துக் கொண்டிருந்தார். 

எனது மச்சான் அப்போது விக்னேஸ்வரா மாணவர். அவர் என்னிடம் இது ரத்தி என்கிற ரெலோ போராளியினுடைய எலும்புக்கூடு என்பதையும் சிவத்தாரே இது ஒரு இயக்ககாரரின் உடல் என்பதை கண்காட்சிக்கு வந்தவர்களிடம் சொன்னார் என்பதையும் சொன்னார். அதிபர் தன் மாணவ உதவியாளர்களை பயன்படுத்தி எலும்புக்கூட்டை ஆக்கியதால் விபரங்கள் வெளியில் கசிந்தது. பின்னாட்களில் நான் பல நண்பர்களிடம் விசாரித்தேன். உறுதிப்படுத்திய அவர்கள்

"ரத்தியின் குடும்பம் அப்படியொன்றும் வசதியற்ற ஏழை குடும்பத்தினரும் அல்ல" என்றும் சொன்னார்கள். ரத்தியின் குடும்பத்தினருக்கு இவ்விடயம் இக்கணம் வரை தெரியுமோ தெரியாது. ஆனால் இக்கணத்திலும் ரத்தியின் எலும்புக்கூடு விக்னேஸ்வரா கல்லூரி ஆய்வுகூடத்தில் இருக்க வாய்ப்புண்டு. ரத்தியின் எலும்புக்கூடு ஒரு முறையான நீதிமன்ற விசாரணை/Forensic விசாரணையின் பின் முறையாக அவரது கரவெட்டி உறவினரிடம் கையளிக்கப்பட்டு ஒரு மனிதனுக்குரிய குறைந்தபட்ட இறுதி ஊர்வல மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படவேண்டும்.  

கருத்துகள் இல்லை: