செவ்வாய், 6 அக்டோபர், 2020

சென்னை மகளிர் பேரணி.. உபி சம்பவம் எவ்வகையில் வேறு பட்டது?

Rajendran Srirangam : · மானமிகு கனிமொழி மனிஷாவிற்கு நீதி கேட்டு நடத்திய
மகளிர் பேரணியில்.... ஒரு மாதக் குழந்தையுடன் தாய் தந்தை..!! இது சாதாரண  நிகழ்வு இல்லை ..கண்ணீ்ர் .    இது வெறும் புகைப்படம் இல்லை கதறல் அய்யோ.....பெண் குழந்தைகளை எப்படி பாதுகாப்பேன் என்று நாளும் தவிக்கும்... தாய்மார்களின் குமுறல்.....கோபம்..... கொந்தளிப்பு..    நேற்றைய மகளிர் பேரணி வட இந்தியாவில் பெண்களுக்கு எதிராக... அரங்கேறிய அட்டூழியங்கள்  அனைத்தும்  தமிழகத்திற்குள் வந்து விட்டது.. 

காரணம் தமிழகம் டில்லியின் கையில்..!   அய்யோ.அடிக்காதீங்கண்ணா வலிக்குது.. ட்ரெஸ் கழட்டிடுறேன்என ஓலமிட்டபெண் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய பொள்ளாட்சி வழக்கு என்ன ஆனது? நீதி எங்கே??    பெரிய மனிதர்கள் கிட்ட நெருக்கமா இருந்தா வேகமாக முன்னேறலாம்...   கல்லூரியில் படிக்கின்ற பெண்களை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை....!!!   இதை விட ஒரு கொடுமை உண்டா??? மதுரை வழக்கு என்னஆனது?    நீதிஎங்கே?    இந்த இலட்சணத்தில் தான் பெண்களின் பாதுகாப்பு உள்ளது.இந்தக் கொடுமையை கண்டு குமுறி எழுந்தக் கூட்டம் தான்... ..

 

Thirunavukarasan Manoranjitham : இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் தினமும் சராசரியாக 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, மொத்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019 இல் மட்டும் 4,05,861 ஆகும், இது 2018 ஐ விட 7% க்கும் அதிகமாகும், இது 2020 செப்டம்பர் 29 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய அரசாங்க தகவல்கள்.
இவற்றை எல்லாம் எதிர்த்து போராடாமல், ஏன் தற்போதைய உபி சம்பவத்திற்கு எதிராக போராடுகிறீர்கள் என்று சில மூளை மழுங்கிகள் கேட்கிறார்கள். கேட்பவர்கள் யார் என்று பார்த்தால் நிர்பயா கற்பழிப்பு விவகாரத்திற்கு எதிராக மட்டும் போராடியவர்கள்!
மற்ற கற்பழிப்பு சம்பவங்கள் போல் அல்லாமல் உபி சம்பவம் எவ்வகையில் வேறு பட்டது?
1. மனிஷா வால்மீகி விவகாரத்தில் அரசாங்கம் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறது என்ற வலுவான சந்தேகம் வரும்படி அரசாங்க நடவடிக்கைகள் உள்ளன.
2. அந்த குழந்தையின் உடலைக்கூட குடும்பத்தினரிடம் கொடுக்காமல், இரவோடு இரவாக தீவைத்து கொழுத்தியது உபி காவல்துறை.
3. ஆயிஷா விவகாரத்தில் நடந்ததுபோலவே குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் / ஊர்வலம் இவற்றை சில அமைப்புகளைச் சார்ந்த மிருகங்கள் நடத்துகின்றன. இதை வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம்.
4. குழந்தையை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்றவர்களை அடித்து விரட்டுகிறது போலீஸ்.
5. இந்த இக்கட்டான நிலையில் அந்த குடும்பத்திற்கு ஆதரவாக நிற்பவர்கள்மேல் தேசதுரோக வழக்கு பதிவு செய்கிறது அரசாங்கம்.
மரண தண்டனைக்கு எதிரானவர்கள் யாரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை. மரணதண்டனை கூடாது என்பது ஒரு கொள்கை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மரணதண்டனை எதிர்ப்பவர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.
மரண தண்டனை வேண்டும் என்பவர்கள் குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு ஆதரவாக போராடியது ஏன்?
மாட்டு மூத்திரம் மட்டுமே குடித்து சிந்திப்பவர்களுக்கும், மாட்டிற்காக மனிதனை அடித்துக் கொல்லும் காட்டுமிராண்டி பயல்களுக்கும் இந்த வித்தியாசம் ஒருபோதும் புரியாது

கருத்துகள் இல்லை: