வெள்ளி, 9 அக்டோபர், 2020

ரூ. 2,650 கோடி டெண்டர்கள் ரத்து : ஊராட்சி மன்ற அதிகாரத்தை பறிக்கும் அ.தி.மு.க அரசுக்கு உயர்நீதிமன்றம்...

kalaignarseithigal - ராம்ஜி :தமிழகம் முழுவதும் ரூ.2650 கோடி மதிப்பிளான ஊராட்சி மன்றங்களின் சாலை மேம்பாட்டு டெண்டர்களை ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் அதிகாரியிட்ட அறிவிப்பாணையை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. : மத்திய அரசின் 14-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி மன்றத்தின் மூலமாக ஊராட்சி வசிக்கும் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற ஊராட்சிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊராட்சி மன்ற தீர்மானங்கள் இல்லாமலேயே தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் மூலமாக தன்னிச்சையாக திட்டங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.    ஊராட்சி மன்ற ஒப்புதல் இல்லாமலும் கிராம சபையின் ஒப்புதல் இல்லாமலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக தமிழக அரசு அதிகாரிகள் மூலமாகவே திட்டங்களை தேர்ந்தெடுத்து செயல்பட உள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஜோதிமணி குமரேசன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

ஊராட்சி மன்றங்கள் முடிவெடுத்து அதனடிப்படையில் டெண்டர் விட வேண்டும் என்று வாதிட்டனர் இந்த வாதத்தை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மூலமாகவே டெண்டர் வெளியிடுவதற்கான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்..

கருத்துகள் இல்லை: