dhinamalar : r : கவர்னர் மாளிகை, பேரணி, தி.மு.க. எம்.பி., கனிமொழி, கைதாகி, விடுதலை சென்னை: ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் கவர்னர் மாளிகை நோக்கி . அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அரசியலாக்கி வருகின்றனர். பல மாநிலங்களில் போராட்டம் நடக்கிறது.
இந்நிலையில் இன்று ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. எம்.பி.யும்,. மகளிர் அணியைச் சேர்ந்தவருமான கனிமொழி தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் கனிமொழி கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் வாகனத்தை செல்ல விடாமல் சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து கனிமொழி விடுவிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக