ஞாயிறு, 4 அக்டோபர், 2020

கவிஞர் பாரதி தாசனுக்கு 1946 ஆம் ஆண்டு, 25,000 ரூபா நிதியினை வழங்கினார்கள்.

Sundar P  : : 1946 - ஆம் ஆண்டுகளில் கவிஞர் பாரதி தாசன் அவர்களுக்கு சிரமமான காலமாக இருந்து. உடல் நலிவு வேறு.
இதை அறிந்த திரு. சி.என். அண்ணாத்துரை அவர்கள் பாரதி தாசனுக்கு பொருளாதார வகையில் உதவ எண்ணினார். தன்நண்பர்கள் ஆலோசனைப்படி " கவிஞர் நிதிக் குழு " ஒன்றை அமைத்தார்.
கல்வியாளர்களும், கட்சிப் பிரமுகர்களையும் கொண்ட அந்தக் குழு 28. 7. 1946 அன்று அறிவிக்கப்பட்டது.
கவிஞர் நிதிக் குழுவில் இருந்தவர்கள்...
1 ) வ.ரா
2 ) S.S. லட்சுமி காந்தன் பாரதி
3 ) ப. ஜீவானந்தம்
4 ) T. S. குஞ்சிதம் அம்மையார்
5 ) க. அன்பழகன்
6) இரா. நெடுஞ்செழியன்
7) மு. செல்லப்பன்
8) என்.வி.நடராஜன்
9) கே. கருப்பண்ணன்
10) டி.எஸ். சொக்கலிங்கம்
11) Sir . R. K. சண்முகம்
12) சி.என். அண்ணாதுரை. ( பொருளாளர் )
13) T. N. ராமன் ( செயலாளர் )
14) பெரியார் ஈ. வெ. ராமசாமி
15) டாக்டர் A. கிருஷ்ணசாமி
16) பா. கண்ணன் ( செயலாளர் )
17) S. முத்தப்பா முதலியார்.
18) N. கிருஷ்ணராஜூ ( தலைவர் )
ஆகியோர் உறுப்பினர்கள்.
விழாக்குழு சார்பில் பலதுறைகளைச் சேர்ந்த பெருமக்கள் கட்டுரைகள், கவிதைகள் கவிஞரைப்பாராட்டி எழுதிய
" கவிஞர் மலர் " ஒன்றும் சிறப்புடன் வெளியிடப்பட்டது.
அம்மலரில் உள்ள " கவிஞர் நிதிக் குழுவினர்" படம்தான் இது.
கவிஞர் மலரில் பிரசுரமாகி இருக்கிறது.
இத்தனை பெருமக்கள் பெரும்பாடுபட்டு 1946 ஆம் ஆண்டு, 25,000 உரூபா நிதியினை கவிஞருக்கு வழங்கினார்கள். (இன்று இதன் மதிப்பென்ன ?

கருத்துகள் இல்லை: