Kathiravan Mayavan : · ■ ஆதி திராவிடராய் இணைவோம், ■ அருந்ததியராய் ஒன்றிணைவோம், ■ பள்ளராக ஒன்றிணைவோம். ■ உடையராய் ஒன்றிணைவோம் ■ நாடாராய் ஒன்றிணைவோம். ■ வன்னிய குல சத்திரியர்களாக இணைவோம், ■முக்குலோத்தோராக இணைவோம், ■ யாதவராய் இணைவோம் . .... இன்னும் எப்படியெல்லாம் தனி தனியாக ஜாதியாக ஒன்றிணைவது என்பதை (தலித் கட்சி)களிடம் இருந்து தமிழகம் பாடம் கற்று கொள்ள வேண்டும்.
Karuppu Neelakandan : · பெரியார் மீது அவதூறு சேற்றை வீசத் தொடங்கிய 2000ஆம் ஆண்டு காலத்திலிருந்தே தன் விவாதங்களை மறுப்பவர்களுக்கு வலிந்து ஜாதி முத்திரை குத்தி அசிங்கப்படுத்தும் அதிகார தாசில்தார் வேலை விசிக வின் பொதுச்செயலாளர் திரு. ரவிக்குமாருக்கு கைவந்த கலையாகும். 'ஆதி திராவிடராய் இணைவோம்' என்கிற பெயரில் இப்போது அவர் விடுக்கும் 'பறையர் அரசியல் ' அழைப்பை அண்ணல் அம்பேத்கர் ஒளியின் கீழ்நின்று கச்சிதமாய் நேர்த்தியாய் கட்டுடைத்து கேள்வி கேட்கும் தலித் முரசு வின் ஆசிரியர் புனிதபாண்டியனை நேற்று ஜாதிப்பட்டியலுக்குள் அடைத்துக்காட்டி அவரது முகநூல் பதிவொன்றில் பின்னூட்டமிட்டு கொச்சைப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஜாதிஒழிப்பை இயக்கமாய் கொண்டியங்கும் நண்பர்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய செயலும் கூட இது. ' தலித் ' 'போதி' 'மணற்கேணி ' என விடுதலை சிந்தனை அடையாளங்களை தான் நடத்தும் பத்திரிகைகளுக்கு பெயரிட்டுக்கொண்டும் அழகுபார்த்துக்கொண்டும் உலா வந்தால் மட்டும் போதாது ரவிக்குமார் அய்யா அவர்களே அதன் பண்பில் மனவிடுதலையோடு உயிர்த்திருக்கவேண்டும். பெரியாரியமும் அம்பேத்கரியுமுமே வெல்லும். ஜாதியவாதங்கள் ஒரு போதும் வெல்லாது.!!
Ravishankar Ayyakkannu : விசிக தங்களைப் பொது நீரோட்டக் கட்சி என்று சொன்னால் மட்டும் போதாது. கிடைக்கிற தொகுதிகளில் அவர்கள் யாரை நிற்க வைக்கிறார்கள் என்பதும் முக்கியம். கிடைத்த 2 MP சீட்களையும் ஒரே சாதிக்கு வழங்கி விட்டு, எங்களைச் சாதிக் கட்சியாகப் பார்க்காதீர்கள் என்றால் என்ன அர்த்தம்? ·
பட்டியல் சாதியினர் ஆதி திராவிடர்களாக ஒன்றிணையும் போது, சாதியின் பெயர் மாறுகிறதே ஒழிய, சாதி ஒழிவதில்லை. இந்து சமயத்தை விடுத்து பௌத்தம் தழுவுவதே சாதி ஒழிப்புக்கான வழி என்று அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார். சிலர் இந்த வழியை விட்டு விட்டு, போகாத ஊருக்கு மற்ற எல்லா வழிகளையும் காட்டுவது ஏன்? அவர்கள் நோக்கம் சாதி ஒழிப்பா? பல்வேறு சாதிகளைத் திரட்டி அரசியலில் பேரம் பேசுவதா?
இன்று பட்டியல் வகுப்பினருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, தேர்தலில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் சட்டத் திருத்தமே! அவர்களை விட கூடுதல் மக்கள் தொகை உள்ள OBC க்கள் ஏமாந்த ஏப்ரல் foolகளாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, எந்த ஒரு பாலின, சாதி, மதப் பிரிவிற்கும் தேர்தல் தொகுதிகள், அமைச்சரவைப் பொறுப்புகள், அரசு பணியிடங்களில் பதவி உயர்வு பெற, எண்ணிக்கையை வைத்துப் பேரம் பேசலாம் என்ற மலிவான அரசியலை விடுத்து, தேசிய அளவிலான சட்டத் திருத்தங்கள் குறித்தே நாம் இயங்க வேண்டும். அதுவே, நிரந்தரமான தீர்வு!
பட்டியல் வகுப்பினர் பிரிந்து நின்றால் அது பாஜகவுக்கு இலாபம் என்கிறார் திரு. ரவிக்குமார் MP. ஆதித்தமிழர் பேரவை எந்தக் கட்சியை ஆதரிக்கிறது? ஒட்டு மொத்த தலித்களுக்குத் தாங்கள் மட்டும் தான் அத்தாரிட்டி என்று சீன் போடுகிற கட்சிகள் தான், பட்டியல் வகுப்பினர் பிரிந்து செல்வதைப் பற்றிக் கவலைப்படுவார்கள். அருந்ததியர் இட ஒதுக்கீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில், நீதிபதி ஜனார்த்தனம், * பள்ளர்கள் * பறையர்கள் / ஆதி திராவிடர்கள் / இதர SC சாதியினர் * அருந்ததியர்கள் என்றே சாதி அடுக்கு அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
சாதி அடுக்கில் மேலே உள்ள பள்ளர்களையும் கீழே உள்ள அருந்ததியர்களையும் சேர்த்துக் கொள்ளாமல், இடையே உள்ள மற்ற சாதிகள் எல்லாம் ஓரணியாகத் திரள்வோம் என்பதற்குப் பெயர் தான் சாதி ஒழிப்பா? இதைத் தானே இத்தனை நாட்களாக OBC சூத்திர சாதி வெறி என்று கூறி வந்தீர்கள்? இப்போது அதே உத்தியை நீங்கள் பயன்படுத்துவது கூட பரவாயில்லை. ஆனால், தயவு செய்து இதனைச் சாதி ஒழிப்பு என்று மட்டும் கூறாதீர்கள்.
மாயாவதியின் ஜாதவ் சாதிக்கு எதிராக பிற பட்டியல் சாதி மக்களை பாஜக திருப்பி விட்டிருக்கிறது. அதனால் மாயாவதி செல்வாக்கு இழந்து வருவது போல் தமிழ்நாட்டிலும் (விசிகவுக்கு) நேரக்கூடாது. ஆகவே தான் 60 சாதிகளை ஆதி திராவிடராய் ஒன்றிணையக் கோருகிறோம் என்று ரவிக்குமார் வெளிப்படையாகவே கவலைப்படுகிறார். கத்தி எடுத்துவனுக்குக் கத்தியால் தான் சாவு என்பது போல், சாதியை வைத்து அரசியல் செய்கிறவர்களுக்கு சாதியால் தான் தோல்வி வரும். சாதி கடந்து, தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் அரசியல் செய்கிறவர்கள் மட்டும் தான் இங்கு வெல்ல முடியும். இதற்குப் பெயர் திராவிட அரசியல்!
பாமக, புதிய தமிழகம் செய்வது சாதி அரசியல் என்று சொல்ல முடிகிறவர்களால், விசிகவைப் பார்த்து ஏன் சொல்ல முடியவில்லை?
Nilavinian Manickam : தலித்திய அடையாளசாதியான அருந்ததியினர் மீது செலுத்தும் ஆதிக்கமெல்லாம் கேள்விப்படலையா.. இன்னும் சந்தையூர் தீண்டாமைச்சுவர் இளிச்சபடியேதான் இருக்கு..இப்படி இருந்துகிட்டு அடுத்தவனுக்கு பாடம் எடுக்கிறதுதான் நகைப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக