தெற்குத்திட்டை பட்டியலின ஊராட்சித் தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டார்.
ஊராட்சி தலைவர்
அவமதிப்பு- செயலாளர் சிந்துஜா கைது
ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. மேலும் சிந்துஜாவை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிந்துஜா தற்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக