இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் குழுவினர், இமாசல பிரதேச டிஜிபி ஆகியோர் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள். . “அவரது குடும்பம் அதிர்ச்சியில் உள்ளது. அவர் நேற்று மாலை வரை நன்றாக இருந்தார். அவரை அந்த நடவடிக்கை எடுக்க வைத்தது என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது” என்கிறார்கள் போலீஸ் குழுவினர்.,
1973 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அஸ்வனி குமார் 2008- 2010 களில் சிபிஐ இயக்குநராக பணியாற்றினார், ஆருஷி தல்வார் கொலை வழக்கு போன்ற வழக்குகளில் விசாரணைகளை மேற்கொண்டவர். குறிப்பாக ஆருஷி தல்வார் கொலையில் புதிய குழுவை அமைத்து பெற்றோரின் மீதான சந்தேக நிழலை கண்டுபிடித்தவர். மேலும் காமன்வெல்த் விளையாட்டு மோசடி குறித்து அவர் ஒரு விசாரணையைத் தொடங்கினார், அஸ்வனி குமாரின் பதவிக்காலத்தில் தான் இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா மீது சோஹ்ராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் அமித் ஷா விடுவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சியில் நாகாலாந்து ஆளுநர் பதவியில் இருந்த அஸ்வனி குமார், 2014 ல் மோடி அரசு பதவியேற்றதும் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் நியமனம் செய்யப்பட்டவர்களை நீக்க முற்பட்டதால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சிபிஐ உயரதிகாரியும், முன்னாள் ஆளுநருமான அஸ்வனி குமாரின் தற்கொலைக் குறிப்பு என்ன என்ற எதிர்பார்ப்பு அரசியல் அதிகார வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது,.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக