சனி, 18 ஏப்ரல், 2020

பரிசோதனைக் கருவிகளின் விலை ஓடிசாவில் 337 ரூ ஆனால் தமிழகத்தில் 600 ரூ ..

மின்னம்பலம் : கொரோனா பரிசோதனை கருவிகளின் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பரிசோதனைக் கருவிகளின் விலை என்ன? ஸ்டாலின்
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை விரைவில் கண்டறிவதற்காக சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான ரேபிட் கிட் கருவிகள் வரவழைக்கப்படுகின்றன. இதன்மூலம் அரை மணி நேரத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோ தனது ட்விட்டர் பக்கத்தில், “தென்கொரியா நிறுவனத்திடமிருந்து 75,000 உயர்தர ரேபிட் கிட் கருவிகளை தலா 337 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியோடு வாங்கினோம். இது மிகவும் குறைந்த விலையில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். தென்கொரியாவுக்கான இந்திய தூதர் மற்றும் தென்கொரிய தூதர் ஆகியோரை தொடர்ச்சியாக தொடர்புகொண்டு இந்த ரேபிட் கிட்களை வாங்கியுள்ளோம் எனவும் கூறினார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஏப்ரல் 18) பகிர்ந்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எழில்

1 கருத்து:

விசு சொன்னது…

இதை கேட்டால் இந்த நேரத்தில் இதை கேட்பது சரியா என்று பதில் கேள்வி கேட்பார்கள். ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். "A Nation deserves its Leader "என்று!

எவ்வவளவு உண்மை.