வெள்ளி, 12 ஏப்ரல், 2019

பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை..பிந்திய கருத்து கணிப்பு

Swathi K : நிறைய பேர் மறுபடி மறுபடி கேக்கும் கேள்வி.. தேசிய அளவில் நிறைய கருத்துகணிப்புகள் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்று சொல்கிறது.. இது உண்மையாகி விடுமா??
பயமே வேண்டாம்... நிச்சயம் பிஜேபி கூட்டணி அதிக இடங்கள் பெற வாய்ப்பே இல்லை.. காரணம் சொல்கிறேன்.. கருத்து கணிப்பில் இருந்து ஆரம்பிக்கலாம்..
மக்களின் எதிர்ப்பு அலையை புரிந்துகொள்ளாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வந்த அனைத்து கருத்துக்கணிப்புகளும் தோல்வியில் தான் முடிந்துள்ளது.. ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள மக்கள் மனநிலையை சரியாக யாரும் கணிக்க முடிந்ததில்லை என்பதற்கு சில உதாரணங்கள்..
A). 2004 தேசிய தேர்தல் - வாஜ்பாய் புகழ் உச்சக்கட்டம்.. காங்கிரஸ் 1999ல் வாங்கிய தோல்வியில் இருந்து பெரிதாக எழமுடியாமல் சோனியா காந்தியை மட்டுமே முழுமையாக நம்பி இருந்த காலம்.. ஒரு புறம் "கார்கில் வீரர் வாஜ்பாய்", "இந்தியா ஒளிர்கிறது", "சோனியா இத்தாலி அடிமை" இது போன்ற பிஜேபி கோஷங்கள்.. பெரிய அளவில் வெளியில் வாஜ்பாய்க்கு எதிர்ப்பு அலை தெரியவில்லை.. தேர்தலுக்கு முந்தைய அனைத்து கருத்து கணிப்புகளும் பிஜேபி கூட்டணி 285-300 இடங்களில் வெற்றி பெறும்.. காங்கிரஸ் கூட்டணி 120 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தது.. ஆனால் முடிவில் பிஜேபி கூட்டணி 181 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 218 இடங்களிலும் வெற்றி பெற்றது..

B). 2017 குஜராத் தேர்தல் - கருத்துகணிப்புகளின் சராசரி பிஜேபி 122-126 இடங்களுக்கு அதிகமாக வெற்றி பெறும்.. காங்கிரஸ் 55-60 இடங்களில் வெற்றி பெறும்.. பிஜேபி சொன்னது 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று.. நடந்தது பிஜேபி 99, காங்கிரஸ் 80..
C). 2018 சத்தீஸ்கர் தேர்தல் - கருத்துகணிப்புகளின் சராசரி பிஜேபி 45-50 இடங்களுக்கு அதிகமாக வெற்றி பெறும்.. காங்கிரஸ் 35-40 இடங்களில் வெற்றி பெறும்.. நடந்தது பிஜேபி 15, காங்கிரஸ் 68..
இதைப்போல நிறைய உதாரணம் சொல்லலாம்..
D). தேசிய தொலைக்காட்சிகள் (NDTV, India Today தனியாக கணிக்கவில்லை.. அவர்கள் மற்றவர்களின் கணிப்பின் சராசரியை தான் வெளியிட்டார்கள்) மட்டுமே மோடி வெற்றி பெறுவார் என்று சொல்லி வருகிறது.. மாநில அளவில் நடக்கும் கணிப்புகள் எல்லாம் குஜராத்தில் மட்டும் பிஜேபி உறுதியான வெற்றி.. மற்ற மாநிலங்களில் இழுபறி தான்.. அந்தந்த மாநில கணிப்புகள் தான் தேசிய அளவில் உள்ள கணிப்புகளை விட அதிக நம்பிக்கை தன்மை கொண்டது..
இப்ப என்னோட கணிப்புக்கு வருவோம் (குஜராத், கடைசியாக நடந்த 5 மாநில தேர்தல் எல்லாவற்றிலும் மற்ற கணிப்புகளை விட எனது கணிப்பு கிட்டத்தட்ட சரியாக இருந்து இருக்கிறது🙂).
என்னோட கணிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனிப்பட்ட அரசியல் கணிப்பாளர்களின், பத்திரிக்கையாளர்களின் தகவல், மாநில அளவில் நடந்த கருத்து கணிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்கள் , கல்லூரி/ பல்கலை தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள், சட்டசபை தேர்தல்கள், இப்போதுள்ள கூட்டணி சூழல், கட்சிகளின் ஓட்டு சதவிகிதம் வளர்ச்சி/ வீழ்ச்சி, மக்களின் மனநிலை இதையெல்லாம் ஆய்வில் கொண்டு கணிக்கப்பட்டது..
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கட்சி குறைந்தபட்சம் (Min) அதிகபட்சம் (Max) வெற்றி பெறும் இடங்கள் என்று கணித்து கடைசியில் அதன் சராசரி.. சராசரியில் +/- 10 சீட்.. எனது கணிப்பு அஸ்ஸாமுக்கு தவறாக இருக்கலாம்.. பிஹாருக்கு சரியாக இருக்கலாம்.. கடைசியில் சராசரி எடுக்கும் போது மொத்த எண்ணிக்கை சரியாக நாம் கணித்தது போல வர வாய்ப்புகள் அதிகம்..
1. தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சிகளின் கூட்டணிகள் நிலை என்ன?
UPA - Congress + DMK(TN) + NCP(Maharastra) + RJD(Bihar) + JDS(Karnataka) + JMM(Jharkhand) + Communist (statewide decision) + Small parties.
NDA - BJP + Nitish's JDU(Bihar) + Ram Vilas Paswan's LJP(Bihar) + Shiromani Akali Dal (Punjab) + Shiv Sena (Maharashtra) + ADMK, PMK, DMDK in TN + Small parties
Post-Poll Alliance Possibility:
1. UPA - SP, BSP, Trinamool, TDP & Communist
2. NDA - YSR Congress, TRS & BJD
2. பாகிஸ்தான் தாக்குதல் எந்த அளவுக்கு மோடி செல்வாக்கை கூட்டி இருக்கிறது?
கடைசி சில மாதங்களில் தேர்தலுக்காக மோடி செய்யும் நாடகங்கள் எல்லாம் மறுபடி மறுபடி அவரின் பக்தர்களை மட்டுமே உற்சாகப்படுத்தியது.. அதை தாண்டி பெரிய அளவுக்கு எதுவுமே எடுபடவில்லை.. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு வடமாநில மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது உண்மை.. ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்து மறுபடி ஜனவரியில் மோடிக்கு எந்த செல்வாக்கு இருந்ததோ அந்த நிலைக்கு வந்துவிட்டது.
3. 2014 & 2019 ஒப்பீடு?
2014 - காங்கிரஸ் மேல் மக்களின் அதிருப்தி, மோடியின் மேல் நம்பிக்கை, முதல்முறை ஓட்டு போடும் இளைய தலைமுறை மோடி மேல் வைத்த நம்பிக்கை.. இவையெல்லாம் சேர்ந்து தான் மோடிக்கு வெற்றியை தேடி தந்தது.
2019 - மோடி மேல் இதுவரை இல்லாத மிகப்பெரும் அதிருப்தி, ராகுல் மேல் கூடிய நம்பிக்கை, மாநில கட்சிகளின் வளர்ச்சி, முதல்முறை ஓட்டு போடும் இளைய தலைமுறைக்கு மோடி "வாயில் வடை சுடுபவர்", "பொய்யர்" என்று தெரியவந்தது. இவையெல்லாம் சேர்ந்து தான் மோடிக்கு தோல்வியை தேடித்தர உள்ளது.
4. EVM மற்றும் பல பிஜேபி கோல்மால்களால் அவர்களுக்கு வெற்றி கிடைக்குமா?
EVM மூலம் சில சதவிகித வாக்குகள் மாறலாம்.. ஆனால் முடிவை தீர்மானிக்க முடியாது.. அந்த சில சதவிகித ஓட்டு கோல்மாலையும் தாண்டி பிஜேபி தோல்வி உறுதி..
5. 2019 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
UPA (காங்கிரஸ்+): 210-230
NDA (பிஜேபி+): 170-190
மற்றவர்கள் (தேர்தலுக்கு முன் UPA & NDAவில் இல்லாதவர்கள்): 134 - 154
நாட்கள் செல்ல செல்ல ஆளும் கட்சி மீது அதிருப்தி அதிகமாக வாய்ப்புள்ளது..
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சரியாக மக்களுக்கு கொண்டுசென்றால் நான் மேலே சொன்ன நம்பரில் இருந்து 15-25 கூட வாய்ப்புள்ளது.. ஆம் ஆத்மீ கூட்டணி (Delhi+ Haryana) வைத்தால் UPA 8 சீட் அதிகம் கிடைக்கலாம்.. (கூட்டணி வாய்ப்பு கம்மி தான் போல தெரிகிறது😢)
தேர்தல் நெருங்க நெருங்க நான் சொன்னதில் பிஜேபி எண்ணிக்கை குறைந்து காங்கிரஸ் எண்ணிக்கை கூட வாய்ப்பிருக்கிறது.. ஆனால் பிஜேபி எண்ணிக்கை கூட வாய்ப்பேயில்லை
6. தேர்தலுக்கு பின்பு கூட்டணி எப்படி இருக்கும்?
காங்கிரஸ்க்கு மம்தா, மாயாவதி, அகிலேஷ், நாயுடு, கம்யூனிஸ்ட் ஆதரவு கொடுக்கலாம்.. பிஜேபியை YSR காங்கிரஸ், சந்திர சேகர் ராவ் TRS, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரிக்கலாம் தேவைப்பட்டால்.
YSR காங்கிரஸ்.. காங்கிரசை ஆதரிக்க கூட வாய்ப்பிருக்கிறது.. (கடந்த சில நாட்கள் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சில் இருந்து தெரிகிறது).. அதன் தொண்டர்கள் எல்லோரும் பாரம்பரிய காங்கிரஸ் மக்கள் தான்..
7. யார் ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது?
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி. அதில் "மம்தா, நாயுடு, கம்யூனிஸ்ட், மாயாவதி, அகிலேஷ், ".. இந்த ஐந்து கட்சியும் இருக்கலாம்... இதில் இரண்டு கட்சி ஆதரவு கொடுத்தாலே போதும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க.. காங்கிரஸ் முக்கியமான அமைச்சர்கள் பதவிகளை கூட்டணிக்கு கொடுத்தாவது ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க முயற்சிப்பார்கள்.. ராகுல் தான் அடுத்த பிரதமர்.. அதற்கு தான் வாய்ப்பு அதிகம்..
2019 result will be sligtly better than 2004 result for UPA (UPA got 218 in 2004). Now UPA will get 210-230.. NDA will get 170-190..
பிஜேபி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை.. கவலை வேண்டாம்..
- Swathi K

கருத்துகள் இல்லை: