
இதைப் பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ளது இந்த EHT குழு. இதைப் பற்றி பேசிய பேராசிரியர் ஹெயினோ ஃபால்ஸ்க் “நாம் இப்போது பார்ப்பது நமது சூரிய குடும்பத்தைவிடப்பெரியது, சூரியனைவிட 6.5 பில்லியன் மடங்கு எடை உடையது. இதைவிடப் பெரிய பிளாக் ஹோல்லை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது” என்றார். “பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம், பிளாக் ஹோல் ஒன்றை படம்பிடித்துவிட்டோம்.” என்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்டுப் பூரித்தார் இந்தத் திட்ட இயக்குநர் ஷெப்பர்ட் டோலேமேன்.
இந்தத் தொலைநோக்கிகளில் இருந்து கிடைத்த புகைப்படம் பெட்டாபைட்டுகள் (petabytes) அளவில் இருந்தது. அது கிலோபைட்டுகளுக்கு குறைக்கப்பட்டு மக்களுக்குக் காட்டப்பட்டது. இதில் நடுவில் இருக்கும் பிளாக் ஹோலைச் சுற்றி அடர்ந்த பிரகாசமான வாயு பார்க்கப்பட்டது. இந்த EHT திட்டத்துக்கான செலவு 60 மில்லியன் டாலர்கள். இதில் 26 மில்லியன் டாலர்களை National Science Foundation (NSF) அமைப்பு செலவழித்துள்ளது.
திட்ட இயக்குநர் ஷெப்பர்ட் டோலேமேன்
ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய பிளாக் ஹோல் இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கூற்று. இவற்றின் புவிஈர்ப்பு சக்தி மிகவும் அதிகம் என்பதால், இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளிவரமுடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டுவிடும். இப்படி சிறிதும் ஒளி இல்லாத காரணத்தால், இவற்றைப் படம் பிடிக்கமுடியாமல் இருந்தனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இன்று தொழில்நுட்பத்தின் உதவியால் அது சாத்தியமாகியுள்ளது.
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக