வெள்ளி, 12 ஏப்ரல், 2019

உயர்நீதிமன்றம் : சமஸ்கிருதம் தேவையில்லை .. மோடி அரசின் அறிவிப்பாணை அதிரடியாக ரத்து

ஸ்பெல்கோ"  : "சமஸ்கிருதம் எதற்கு  மோடி அரசின் அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்தது உயர்நீதிமன்றம் –
 தமிழகத்தின் 25 பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வு முடிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. >ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என, உத்தரவிட கோரி, காமராஜ் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று இந்த பல அதிரடி உத்தரவை, நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
தொல்லியல் துறை பணியிடங்களுக்கு சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும் என்ற தகுதியை நீக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தொல்லியல் துறை பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் இவ்வாறு ஒரு நிபந்தனை இடம்பெற்றிருந்த நிலையில், இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துக்களே உள்ளன” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழ் பிராமி எழுத்துக்களை இருப்பதால் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது, என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
ஆராய்ச்சி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது 
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கைகளை தயார் செய்ய மேலும் 8 மாதங்கள் அவகாசம் தேவை என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அந்த அறிக்கையின் அடிப்படையில்தான், அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு ஆய்வு நடத்தவில்லை எனில் மாநில அரசு ஆய்வு நடத்த அனுமதி வழங்குவீர்களா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளித்த, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், மாநில அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டால், அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து, அகழாய்வு நடத்த மாநில அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கும் என்பதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்தது.
இதையடுத்து, ஏப்ரல் 25ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை

கருத்துகள் இல்லை: