

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் எப்படி பிரெஞ்சு நிறுவனத்தின் துணை பங்குதாரராக ஆனது என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரபேல் பேர ஊழலுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், அந்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரபேல் வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்து நாளேட்டில் வெளியான ரபேல் ஆணவங்களை ஆதராமாக ஏற்று விசாரிக்க உள்ளது. திருடப்பட்ட ஆணவங்களை விசாரணைக்கு ஏற்க கூடாது என்ற மத்திய அரசின் வாதங்களையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதனிடையே இந்த வழக்கை தாக்கல் செய்த மனுதாரர். ரபேல் விமானங்களை உற்பத்தி செய்துதருவதாக கூறிய டசால்ட் நிறுவனம், துணை பங்குதரராக அனில் அம்பானியின் நிறுவனத்தை நியமித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வரும் அன்று முழு தகவலை அளிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக அனில் அம்பானியின் நிறுவனம் பிரெஞ்சு நிறுவனத்தின் துணை பங்குதாரராக நியமிக்க விவகாரம் உள்பட பல்வேறு அம்சங்களை நீதிமன்றம் விசாரிக்கப் போகிறது. இதனால் பல உண்மைகள் நிச்சயம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக