கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றது. இது தொடர்பான வழக்கு விசாரணை பிரித்தானிய நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கொலையாளிக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. சொத்துப் பிரச்சினை காரணமாக கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
எனினும் திருமணம் செய்த நாள் முதல் கணவன், மனைவியை அடிமையாக நடத்தியுள்ளமையால் மன விரக்தி அடைந்த மனைவி, படுகையில் இருந்த கணவனை அடித்து கொலை செய்துள்ளார். கணவனின் கொடுமைகளை இதற்கு மேலும் பொறுக்க முடியாமையினாலும்,
கணவன் மீது ஏற்பட்டகோபத்தினாலும் குறித்த கொலையை செய்ததாக பாக்கியம் ஒப்புக் கொண்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு நீதிமன்றம் 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக