சனி, 13 ஏப்ரல், 2019

அம்பானி பிரான்சுக்கு செலுத்த வேண்டிய 1120 கோடி ரூபாயை பாஜக கொடுத்திருக்கிறது .. ரபேல் விலை உயர்வு ஊழல் இதுதான்

Shahjahan R : அனில் அம்பானிக்கு பிரான்சில் ஒரு டெலிகாம் கம்பெனி
இருக்கிறது. அதன் பெயர் - Reliance Atlantic Flag France.
அந்தக் கம்பெனியின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்த பிரான்ஸ் அரசு, 2007-2010 காலகட்டத்துக்கு 60 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டியிருக்கிறது என்று கண்டறிந்தது.
7.6 மில்லியன் யூரோ செலுத்தி விடுகிறோம் என்று ரிலையன்ஸ் இறங்கி வந்தது.
பிரான்ஸ் அதிகாரிகள் மறுத்து விட்டார்கள்.
பிரான்ஸ் மீண்டும் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த்து.
2010-12 காலத்துக்கு 91 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டும் என்றும் கோரியது பிரான்ஸ்.
அப்புறம்...
அப்புறம்தான் பெரிய ட்விஸ்ட்
2015இன்படி ரிலையன்ஸ் செலுத்த வேண்டிய வரி 151 மில்லியன் யூரோ.
2015இல் ரபேல் ஒப்பந்தம் போடுகிறார் மோடி
அடுத்த ஆறே மாதங்களில் ரிலயன்ஸ் தருவதாகச் சொன்ன 7.6 மில்லியன் மட்டும் ஏற்றுக்கொண்டு 143 மில்லியன் யூரோவை தள்ளுபடி செய்துவிட ஒப்புக் கொள்கிறது பிரான்ஸ் அரசு.
சூப்பர் இல்லையா?

இங்கே ஆர்டிஐயில் கேட்பது போல, பிரான்சில் ஷெர்பா என்கிற ஒரு என்ஜிஓ, 2018 அக்டோபரில் ஒரு கேள்வி எழுப்பியது. அந்தக் கேள்விக்கு அரசு அளித்த பதிலிலிருந்துதான் இந்த விவரம் தெரிய வந்தது.
அப்படியானால் பிரான்ஸ்க்கு இது நஷ்டமா?
இல்லை.
என்னது? 143 மில்லியன் யூரோ - 1120 கோடி ரூபாய் வரி கிடைக்காமல் போவது பிரான்சுக்கு நஷ்டம் இல்லையா?
இல்லை. பிரான்சுக்கு வேறு வழியில் அதைவிடப் பெரிய லாபம் லாபம் வரும்போது இதை விட்டுக்கொடுக்கத்தானே செய்யும்?
அந்த லாபம்தான் ரபேல். பல்லாயிரம் கோடி பேரம்.
ஆக, அம்பானி பிரான்சுக்குத் தர வேண்டிய 1120 கோடி ரூபாய் வரிப்பணத்துக்கும் சேர்த்து இந்தியா ரபேலுக்குத் தரப்போகிறது.
அதாவது, ஊரான் வீட்டு நெய்யே பெண்டாட்டி கையே என்பது போல நம் இந்திய மக்களின் பணத்தை எடுத்து அம்பானிக்கு உதவி செய்கிறார் மோடி.
ஜூலியன் என்ற பத்திரிகையாளர் இதை டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
- Shahjahan R
By the time the prime minister announced India's deal to buy 36 Rafale combat aircraft, the total amount owed by Reliance to the French state in taxes was at least 151 million euros, the report said. However, just six months after PM Modi's Rafale announcement, the French tax authorities reportedly waived off Anil Ambani's 143.7 million euros tax debt.
Reference:
https://www.indiatoday.in/…/rafale-deal-french-authorities-…

1 கருத்து:

Durai Ilamurugu சொன்னது…

இது மோடி மாதிரி கேடிகளால் மட்டுமே இயலும்