
கரிங்கோழக்கல் மாணி மாணி என பரவலாக அறியப்படும் கே. எம். மாணி இரு தினங்களுக்கு முன்பு மார்பக தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியின் தலைவரான கே.எம் மாணி, கேரள மாநில சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்ந்து 50 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். கேரள மாநிலத்தின் நிதி அமைச்சராக பணியாற்றியபோது 13 நிதிநிலை அறிக்கைகளை சட்டசபையின் சமர்ப்பித்த சாதனை படைத்தவர்.
கேரள சட்டசபையின் மிக நீண்டநாள் உறுப்பினராகவும் இருந்தவர். கேரள அரசில் நீண்டநாள் அமைச்சராகப் பணியாற்றிய பெருமையையும் உடையவர்.
1965-ஆம் ஆண்டு பாலை சட்டமன்றத் தொகுதி உருவானதிலிருந்து தொடர்ந்து அத்தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கேரள மாநில நிதியமைச்சராக 4 முறையும், சட்ட அமைச்சராக 7 முறையும் பதவி வகித்துள்ளார். அரை நூற்றாண்டுக்கு மேல் அரசியல் தலைவராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர்.
86 வயது ஆகும் கே.எம். மாணி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக