திங்கள், 8 ஏப்ரல், 2019

60 எதிர்கட்சி தலைவர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு.. .டெல்லி, கோவா, ம.பியில் ம.பி முதல்வர் கமல்நாத் உதவியாளர் வீட்டிலும்

Shyamsundartamil.oneindia.com :  டெல்லி: டெல்லி, மத்தியபிரதேச மாநிலம் இந்தூர்
உள்ளிட்ட 60 இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. 
இந்த நிலையில் தற்போது நாடு முழுக்க அங்கங்கே ஐடி ரெய்டு நடந்து வருகிறது . கடந்த வாரம்தான் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றது. மொத்தம் மூன்று நாட்கள் இந்த ரெய்டு நடைபெற்றது. இதில் 11 கோடி ரூபாய் வரை பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்... 
இந்த நிலையில்தான் தற்போது நாடு முழுக்க வெவ்வேறு இடங்களில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. டெல்லி, மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் உள்ளிட்ட 60 இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது.& இது வடஇந்தியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கு சோதனை எங்கு சோதனை ம.பி முதல்வர் கமல்நாத்தின் உதவியாளர் வீட்டிலும் கடும் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் பெரிய நிறுவனங்களான அமிரா குரூப், மோஸர் பயர், ராத்தூல் பூரி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடக்கிறது. டெல்லியில் மட்டும் 35 இடங்களில் சோதனை நடக்கிறது. இந்தூர், பூலா, கோவா ஆகிய இடங்களிலும் 25 இடங்கள் வரை சோதனை நடக்கிறது. 500க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த சோதனையில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் வடஇந்தியாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 
 இதுவரை வருமான வரிச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.9 கோடி பணம் பறிமுதல் செய்யப்ட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் நிறைய தங்கம் மற்றும் தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: