செவ்வாய், 9 ஏப்ரல், 2019

இலங்கை திராவிட முன்னேற்ற கழக வரலாறு... மக்கள் மறந்து போன வரலாறு .. பெ.முத்துலிங்கம்

1954ல் இலங்கை வந்த தமிழக திராவிட முன்னேற்ற கழக மூத்த உறுப்பினர் நாவலர் நெடுஞ்செழியன் இவ்விரு பிரிவினரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆயினும் அம்முயற்சி
திரு. ஏ. இளஞ்செழியன் பதவியேற்ற முதல் இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தை இலங்கை மயமாக்க முனைந்ததுடன் அதன் தலைமை இலங்கையரைக் கொண்டதாக இருக்க வேண் டும் என் ற நிலைப் பாட்டினைக் கொண்டிருந்தார்.
ஆனால் இக்கருத்தினை எதிர்த்த பிரிவினர் தமிழக தி. மு. க. தலைமையே இலங்கை தி. மு. க.வின் தலைமையாக இருக்கவேண்டும் எனும் நிலைப்பாட்டினை மேற்கொண்டனர்.  https://www.namathumalayagam.com/2019/01/2.html


இப்பிரச்சினை தொடர்பாக பொதுச் செயலாளர் என்ற ரீதியில் திரு. ஏ. இளஞ்செழியன் வெளியிட்ட துண்டுப் .. .
. பருத்தித்துறை, வட்டுக்கோட்டை, பலாலி, நெல்லியடி, வேலணை. தொண்டமானாறு, உடுப்பிட்டி, கரவெட்டி, கரணவாய், இமயாணன், கரணவாய் தெற்கு, கொடிகாமம், சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, புலோலி போன்ற பகுதிகளில் ஒரு வருடத்திற்குள் இலங்கை திராவிடர் முன்னேற்ற கழக கிளைகள் அமைக்கப்பட்டன. மேலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற நகரங்களிலும் சிற்றூர்களிலும் தமது கால்களைப் பதித்த இ.தி.மு.க. தமிழ் மொழிப்பிரச்சினையுடன் நாடு தழுவிய ஸ்தாபனமாகப் பரிணமித்தது.
முன்னேற்ற கழக உட்கட்சி முரண்பாட்டிற்கு முகம் கொடுத்தது. திரு. ஏ. இளஞ்செழியன் தலைமையிலான பிரிவினர் இலங்கை தி. மு. க இலங்கை வாழ் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்காக குரலெலுப்ப வேண்டுமென்பதுடன் தமிழக தி. மு .க தலைமைகளை இலங்கை தி. மு. க ஏற்கக்கூடாது எனும் கருத்தினை
முன்வைத்தனர். இக்கருத்தினை ஏற்காதவர்கள் வேரொரு அமைப்பாக பிரிந்தனர். 1954ல் இலங்கை வந்த தமிழக திராவிட முன்னேற்ற கழக மூத்த உறுப்பினர் நாவலர் நெடுஞ்செழியன் இவ்விரு பிரிவினரையும் இணைக்கும் முயற

1957 டிசெம்பர் 28, 29 ஆகிய தினங்களில் இலங்கை திராவிடர் முன்னேற்ற கழக சமூக சீர்திருத்த மாநாடொன்றினை யாழ்ப்பாணத்தில் நடாத்த திட்டமிட்டபோதிலும் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக இம் மாநாடு பிற்போடப்பட்டதுடன் இதன் பிரதி விளைவாக பருத்தித்துறை கடற் கரையில் பொதுக்கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
தமிழகத்தைச் சார்ந்த தி. மு. க., பிரமுகர்களான நாவலர் நெடுஞ்செழியன், ஈ. வி. கே சம்பத், பேராசிரியர் க. அன்பழகன் போன்றோர் வருகை தரவுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தமையினால் பெருந்திரளான மக்கள் பருத்தித்துறை கடற்கரை மைதானத்தை வந்தடைந்திருந்தனர். இவ்வாறு கூடிய மக்கள் மத்தியிலே ஓர் கயிறு கட்டப் பட்டிருந்ததுடன் இக் கயிற் றின் இருமருங்கிலும் மக்கள் கூடியிருந்தனர்..
கீழே உள்ள படத்தில் யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ லங்கா அரசுக்கு எதிரான புகழ் பெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் ( 1961 ) இலங்கை திராவிடர் கழக கொடியோடு எ.இளஞ்செழியன் அமர்ந்திருப்பதை காணலாம் .. இந்த போராட்டம் தமிழரசு முத்திரை வெளியிட்டு இலங்கை அரசமைப்ப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இளஞ்செழியன் உடபட அனைத்து தலைவர்களும் கைது செய்ப்பட்டு முடிவுக்கு வந்தது



 https://www.namathumalayagam.com/2019/01/3.html


1956ல் சிங்கள மொழியை அரச கரும மொழியாக காலஞ்சென்ற எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசு அமுலாக்கிய போது அதுநாள் வரை தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமஷ்டி ஆட்சியைக் கோரி வந்த தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் உட்பட வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரலெழுப்பி வந்த தமிழ் அமைப்புகள் அனைத்தும் இவ் அநீதியான சட்டத்திற்கெதிராக போர்க்கொடி உயர்த்தலாயின.
தமிழகத்தில் ஹிந்தி மொழியை அமுலாக்குவதற்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம் செய்த இலங்கை .திராவிட முன்னேற்ற கழகம்  இலங்கைத் தேசியப் பிரச்சினைகளுடன் தம்மை இணைத்துக் கொள்ள ஆரம்பித்த வேளையிலேயே சிங்கள மொழியை மட்டும் அரச கரும மொழியாக இலங்கை அரசு அமுலாக்கியது.
இலங்கை அரசின் இவ் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக மொழியுரிமைப் போராட்டத்தையும் இ.தி.மு.க. தமது ஏனைய நடவடிக்கைகளுடன் ஒன்றிணைத்துக் கொண்டது.
தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடுக்க வேண்டுமெனும் பிரச்சாரத்தை முன்னெடுத்த இ.தி.மு க. மலையகத்தில் மட்டுமல்லாது. வடகிழக்கு மற்றும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரங்களிலும் மொழியுரிமைக்கான பிரச்சாரக்கூட்டங்களை நடாத்தியது.

தமிழரசுக் கட்சியினரும் ஏனைய தமிழ் அமைப்புகளும் மொழி உரிமைக் கான போராட்டங்களை முன் னெடுத் த மையால் தமிழ் மக்களுக் கெதிரான இன வாதமும் தென்னிலங்கையில் தழைத்தோங்கலாயின. இவ்வாறான பின்னணியின் கீழ் இ.தி.மு.க. துணிந்து தென்னிலங்கையில் மொழி உரிமைக்கோரிக் கூட்டங்களை நடாத்தியது.
தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கோரும் பிரச்சாரக் கூட்டத்தை தமது முதலாவது மாநாட்டுடன் 1956 மே 15ம் திகதி பண்டாரவளை சீவலி வித்தியாலயத்தில் நடாத்தியது. இம்மாநாட்டிற்கு முன்னோடியாக நடாத்தப்பட்ட ஊர்வலத்தில் இ. தி. மு. க. உறுப்பினர்கள் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடு! இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கு! நாட்டை சோசலிச பாதைக்கு கொண்டு செல்வோம் போன்ற பதாகைளை தூக்கிச் சென்றனர். இவ் ஊர்வலத்தை சிங்கள இனவாதிகள் சீர்குலைத்து கலகம் ஏற்படுத்தமுனைந்த வேளை இலங்கை சமசமாஜக் கட்சியின் சிங்களத் தோழர்கள் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டு ஊர்வலத்திற்கு பாதுகாப்பு அளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை சமசமாஜக் கட்சி தமிழும் சிங்களமும் ஆட்சி மொழி எனும் கொள்கையை இக்காலகட்டத்தில் கடைப்பிடித்ததுடன் இக்கொள்கை தொடர்பாக தமது அங்கத்தினர் மத்தியில் அரசியல் கல்வியூட்டியமை இதற்கான காரணமாகும். பண்டாரவளையில் நடாத்தப்பட்ட இம் மாநாட்டில் நடிகர் எம்.ஆர்.ராதாவின் "கீமாயணம்" என்ற நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் இந்நாடகத்தில் பிரதான வேடமேற்று நடித்த திரு. லடிஸ் வீரமணிக்கு நடிகவேள் என்ற பட்டம் திரு. ஏ. இளஞ்செழியனால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மாநாட்டைத் தொடர்ந்து நாட்டின் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரேதசங்களான வட கிழக்கிலும் பிரச்சாரக் கூட்டங்களை மேற்கொண்ட இ. தி. மு. க. மூன்று பிரதான குறிக்கோள்களை இலக்காகக் கொண்டது அவையாவன சாதி ஒழிப்பு, இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை, மற்றும் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து எனவாக அமைந்ததுடன் ஏலவே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரலெழுப்பி வந்த அமைப்புகளுக்கு இது சவாலாக அமைந்தது. 1956 ஆகஸ்ட் 15ம் திகதி யாழ், அரியாலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடந்த கூட்டத்துடன் தமது காலை வடக்கில் பதித்த திரு. ஏ. இளஞ்செழியன் வடக்கில் இ. தி. மு. க. கிளைகளை அமைப்பதிலும் செயற்படலானார். அது நாள் வரை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தாம் வாழும் பகுதிகளில் பகுத்தறிவு மன்றம், திருக்குறள் மன்றம், போன்ற மன்றங்களை அமைத்து செயற்பட்ட யாழ்ப்பாண அறிவுஜீவிகள் பிரிவினர் இ. தி. மு. க. வுடன் இணைந்து செயற்படலாயினர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் எனக்கூறப்படும் மக்கள் வாழும் பிரதேசங்களில் இ. தி. மு. க. மிக விரைவில் வேரூன்றலாயிற்று.
பருத்தித்துறை, வட்டுக்கோட்டை, பலாலி, நெல்லியடி, வேலணை. தொண்டமானாறு, உடுப்பிட்டி, கரவெட்டி, கரணவாய், இமயாணன், கரணவாய் தெற்கு, கொடிகாமம், சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, புலோலி போன்ற பகுதிகளில் ஒரு வருடத்திற்குள் இ. தி. மு. க. கிளைகள் அமைக்கப்பட்டன. மேலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை போன்ற நகரங்களிலும் சிற்றூர்களிலும் தமது கால்களைப் பதித்த இ.தி.மு.க. தமிழ் மொழிப்பிரச்சினையுடன் நாடு தழுவிய ஸ்தாபனமாகப் பரிணமித்தது.
இ. தி. மு. க. இவ்வாறாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக எழு ந் த பிரச்சினைகளுக்காக குரலெழுப் பிய வேளை த மிழக திராவிட முன்னேற்றக்கழகம் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடுவதற்கான தீர்மானத்தை மேற் கொண்டது. பெரியாரினால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடக்கழகம் (சுயமரியாதை) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிகளைப் பேசுகின்ற மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட நாட்டினை பெறுவதை குறிக்கோளாகக் கொண்டிருந்தபோதிலும் பிரித்தானியரால் அறிமுகப் படுத்திய சட்டசபை தேர்தல் களில் பங்குபெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக தமது கொள்கைக்கு சார்பானவர்கள் எனும் கட்சிக்கு, தனிநபர்களுக்கு தேர்தல் காலங்களின் போது ஆதரவு வழங்கியது. கழக அங்கத்தவர்கள் இவ்வாறான அரசியலில் ஈடுபட்டால் லஞ்ச ஊழல்களுக்கு பலியாகி விடுவர் என்னும் கருத்தினை பெரியார் கொண்டிருந்தார். இதே கொள்கையினையே திரு. சி. என். அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன் னேற்றக் கழகமும் பின் பற்றியது. ஆயினும் இக்கொள்கையிலிருந்து அந்நியமாகி 1957ல் நடந்த பொதுத்தேர்தலில் பங்கு கொண்டது.
தேர்தலில் பங்கு கொள்வதை நியாயப்படுத்துவதற்காக தமிழக தி. மு. க. 1957-ல் சிறப்பு மாநாட்டை கூட்டியது. 10-02-1957ல் கூடிய இச் சிறப்பு மாநாட்டில் தேர்தலில் ஈடுபட்டுத்தான் அந்தஸ்து தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்களல்ல தி. மு. கழகத்தில் இருப்பவர்கள். நாட்டிற்குப் புதியதோர் அந்தஸ்து தேடித் தருவதற்காகவே தி. மு. கழகம் தேர்தலில் ஈடுபடுகிறது (14) எனும் கருத்தினை முன்வைத்து தமிழக தி. மு. க. சட்டசபைத் தேர்தலில் பங்குபற்றியது.
இச் சந்தர்ப்பத்தில் திரு. ஏ. இளஞ்செழியனின் தலைமையில் இலங்கைத் தி. மு. க. சிறப்புக் கூட்டமொன்றினை நடாத்தி தமிழக தி. மு. க. வின் நிலையினைப்பற்றி ஆராய்ந்ததுடன் ஈற்றில் அம்முடிவினைப் பற் றி நடுநிலைப் பாட்டை மேற் கொண்டது. பின் னர் தமிழக தி. மு. க வுடனான தொடர்பினை கைவிட்டு தனித்து சுயமரியாதை இயக்கக் கொள்கையினை முன்னெடுப்பது என்னும் தீர்மானத்தை மேற் கொண்டது. இத் தீர்மானத்துடன் இ.தி.மு.க இலங்கைப் பிரச்சனைகளுடன் மட்டும் தம்மை வரையறுத்துக்கொண்டது.
1957-ன் இறுதிகளில் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வடக்கின் ஏனைய பிரதேசங்களிலும் கிளைகளை அமைத்த இ. தி. மு. க. சாதி அமைப்பு முறைக்கெதிராக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. 1957 டிசெம்பர் 28, 29 ஆகிய தினங்களில் இ. தி. மு. க. சமூக சீர்திருத்த மாநாடொன்றினை யாழ்ப்பாணத்தில் நடாத்த திட்டமிட்டபோதிலும் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக இம் மாநாடு பிற்போடப்பட்டதுடன் இதன் பிரதி விளைவாக பருத்தித்துறை கடற் கரையில் பொதுக்கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. தமிழகத்தைச் சார்ந்த தி. மு. க., பிரமுகர்களான நாவலர் நெடுஞ்செழியன், ஈ. வி. கே சம்பத், பேராசிரியர் க. அன்பழகன் போன்றோர் வருகை தரவுள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தமையினால் பெருந்திரளான மக்கள் பருத்தித்துறை கடற்கரை மைதானத்தை வந்தடைந்திருந்தனர். இவ்வாறு கூடிய மக்கள் மத்தியிலே ஓர் கயிறு கட்டப் பட்டிருந்ததுடன் இக் கயிற் றின் இருமருங்கிலும் மக்கள் கூடியிருந்தனர்.
தமிழகத்தைச் சார்ந்த பேச்சாளர்களுக்கு இந்திய அரசு இலங்கை வர அனுமதி அளிக்கவில்லை . எனினும் இ.தி.மு.க பொதுச் செயலாளரை பிரதானப் பேச்சாளராகக் கொண்டு கூட்டம் நடாத்தப் பட்ட து. பெருந் திரளான மக்கள் இள ஞ் செழியனின் உரையை கேட்க, கூடியிருந்ததுடன் கட்டத்தின் நடுவே கயிறு கட்டப்பட்டு மக்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். பிரதான உரையை ஆற்றவிருந்த திரு. ஏ. இள ஞ் செழியன் கூட்டத் தின் நடுவே கயிறு கட்டப்பட்டிருப்பதற்கான காரணத்தை அமைப்பாளரிடம் கேட்டறிந்தார். சாதிரீதியாக மேல் சாதியினர் கீழ் சாதியினருடன் இரண்டறக்கலக்க விரும்பாததன் காரணமாகவே கயிறு கட்டப்பட்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட திரு. இளஞ்செழியன் தமது உரையின் போது சாதிப் பிரிவிற்கு காரணமாயுள்ள வர்ணாசிரமத்தையும் இந்து மதக் கடவுள்களையும் கடுமையாக விமர்சித்தார். இதனால் வெகுண்டெழுந்த சாதியவாதிகளும் மதவாதிகளும் கடவுளை திட்டாதே இந்து மதத்தை சாடாதே என கோசங்களை எழுப்பி மேடையை நோக்கி கற்களை வீசினர். இதனால் மேடையிலிருந்த யாழ் மாவட்ட தி. மு. க .செயலாளரும் கட்ட அமைப்பாளருமான இரா. திருமறவன் (மாணிக்கம்) காயத்திற்குள்ளானார். இதனால் வெகுண்டெழுந்த கீழ்சாதியினர் எனக்கூறப் படுவோர் மேல் சாதியினர் நின்ற பகுதியை நோக்கி கற்களை எறிந்ததுடன் இரு பிரிவினருக்கும் இடையில் கலகம் மூண்டது. இக்கைகலப்பு சம்பவம் வடக்கு வாழ் தாழ்த்தப்பட்டோர் எனக் கூறப்படும் மக்கள் மத்தியில் ஓர் உத்வேகத்தை அளித்ததுடன் வடகிழக்கு வாழ் மக்கள் மத்தியில் இ.. தி. மு. க. பற்றிய நம்பிக்கையையும் ஒங்கச் செய்தது. இதேவேளை அதுநாள்வரை வடகிழக்கு வாழ் மக்கள் மத்தியில் செயற்பட்டு வந்து, இயக்கங்களும் அமைப்புக்களும் இ.தி.மு.க.விற்கு எதிரான துஷ்பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் ஊக்குவித்தது,
பிற்போடப்பட்ட சமூக சீர்த்திருத்த மாநாடு 1958 மே 24, 25 ஆகிய தினங்களில் யாழ்நகர மண்டபத்தில் நடைபெறும் எனும் பிரச்சாரத்தை இ. தி. மு. க. மேற்கொண்டது. இக்காலக் கட்டத்தில் யாழ்வாழ் மக்கள் மத்தியில் பெருமதிப்பைப் பெற்றிருந்த தென் புலோலி புலவர் கந்தமுருகேசனார் இம்மாநாட்டை நடாத்துவதற்கான பொறுப்பினை ஏற்றிருந்தார். இதனால் இ. தி. மு. க.வின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது! இச் செல்வாக்கு அதிகரிப்புடன் இ. தி. மு. க.விற்கெதிரான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. தமிழரசுக்கட்சி சார்பான “சுதந்திரன்" பத்திரிகை இ. தி. மு. க. ஒழுங்கு செய்திருக்கும் மாநாட்டிற்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தது. இதனை மறுத்து இ. தி. மு. க. வெளியிட்ட துண்டு பிரசுரமொன்றில் இம்மாநாட்டினைப்பற்றிய செய்தியினையும் மறுபுறத்தில் பின்வரும் செய்தியினையும் வெளியிட்டிருந்தது.
இலங் கை திராவிடர் முன் னேற்றக் கழகத்தின் வேகமான வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டு அதை தடுத்து நிறுத்தி விடலாம் என்ற நோக்கோடு சுதந்திரன் பத்திரிகை அடிக்கடி பொய்யும் புனையும் கலந்து மயானக்குரல் எழுப்பி வருகின்றது. அதன் பிரதிபலிப்பாக 22. 12. 1957ல் வெளியான சுதந்திரனில் யாழ்நகரில் கூடும் மாநாட்டை குழப்பும் வகையில் சூதுச் செய்தியை வாரி வீசி இருக்கிறது. அப்போலிச் செய்திகளை நம்பி இயக்கத் தோழர்களும் ஆதரவாளர்களும் தங்கள் பணியினின்றும் கொஞ்சமும் நழுவாமல் முன்னிலும் வேகமாக பணியாற்றி யாழ் நகர மாநாட்டை சிறப்பிக்க வேண்டுகிறோம் வெற்றி நமதே! இ. தி. மு. க. (15)
இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற இ. தி. மு. க. இக்காலக் கட்டத்தில் நாட்டின் அனைத்து தமிழ் மக்களையும் தம் வசம் இழுக்கும் வகையிலான தமது கொள்கைத் திட்டத்தை முன்வைத்தது. பொதுச் செயலாளர் மு. அ. வேலழகன் பெயரில் வெளியிடப்பட்ட இக்கொள்கை விளக்கம் பின்வரும் விடயங்களை உள்ளடக்கியிருந்தன.
இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகக் கொள்கை விளக்கம்
இலங்கையைத் தாயகமாகக் கொண்ட திராவிட மக்கள் (தமிழ் பேசும் மக்களின்) நலன் பேணிக் காப்பதே இ. தி. மு. க. கவின் குறிக்கோள்.
1. அடிப்படை நோக்கங்கள் பன்னெடுங் காலமாக அனுபவித்து வந்த உரிமைகளையிழந்து சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுள்ள இலங்கை திராவிட மக்களது (தமிழ் பேசும் மக்கள்) இழிவை மாற்றவும் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்று சகல துறைகளிலும் சமவாய்ப்பும் சமசந்தர்ப்பமும் கிடைக்கச் செய்யவும் மதவேறுபாடற்ற முறையில் தமிழ்ப் பேசும் மக்களை ஓரணியிற் திரட்டுதலும்.
2. நாடற்றவர் பன்னுாறு ஆண்டுகளுக்கு முன்பதாக இந்நாட்டின் நிலத்தைப் பண்படுத்தவும் பொருள்வளத்தைப் பெருக்கவும் கொண்டு வரப்பட்டு அந்த நாள் முதல் இந்த நாள்வரை வாழையடி வாழையாக இந்நாட்டின் உயிர்நாடியான பொருள் வளத்தைப் பெருக்கும் பெருந்தொழிலில் ஈடுபட்டு பிறப்பாலும் வாழ் நாள் அளவாலும் இலங் கைக் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டிய மலையகத் திராவிடத்தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கி இந்நாட்டு மக்களோடு கூடி வாழும் நிலையை சீரழித்து இலங்கை தமிழ் பேசும் இனத்தின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ள போக்கை மாற்றி குடியுரிமை வாக்குரிமை பெற்ற இலங்கைக் குடிமக்களாக வாழ வகை செய்வது.
3. மொழி தமிழ் மொழியை இரண்டாவது தேசிய இனமான திராவிட (தமிழ்த் தேசிய ) இனத் தின் தேசிய அரசியல் மொழியாக அங்கீகரிக்கப்போராடுதல்.
4. சமுதாயம் மொழி, கலை, பண்பாடு, மனோநிலை ஒரு குடிமக்கள் என்ற உணர்ச்சி வரலாற்று பாந்தத்துவம் போன்ற இயல்புகளால் ஓரின மக்களென்ற தேசிய உணர்வோடு வாழ்ந்த திராவிட மக்களின் வாழ்வின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கவும், சீரழிக்கவும் இடையிற் புகுத்தப்பட்ட சாதிப்பிரிவினைகள் அவற்றை நம்ப உண்டு பண்ணிய புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயங்கள் சடங்குகள் திராவிட மக்களின் சிந்தனையைக் குழப்பவும் நிதானத்தையிழக்கவும் அறியாமையில் ஆழ்த்தவும் கற்பிக்கப்பட்ட கற்பனைக்கதைகள், முறைகள், ஏற்பாடுகள் போன்றவைகளை இயலால், இசையால், கூத் தால், எழுத்தால் களைந்தெறிதல். பிறப்பால் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற மனப் பான்மையை அகற்றி ஒரே இனமக்களென்ற பழங்கால திராவிட மக்களது தேசிய வாழ்க்கை முறையை நிலைநாட்டுவதும் திராவிட மக்களுடைய சிந் தனையை பகுத்தறிவு அடிப்படையில் முறைப் படுத்தி விரிவு படுத்துவதும்.
5. அரசியல் பொருளாதாரம் - பொருளாதார ஏற்றத் தாழ்வற்ற இன. சாதி, சமயப் பேதமற்ற ஒரு சமதர்மக் குடியரசு அமைவு பெறுவதற்கு துணை செய்தல். இவை இலங்கை தி. மு. க. பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை கொள்கைகளாகும். (16)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியினால் சிங்கள அரசகருமம் மொழிச்சட்டம் அமுலாக்கப்பட்டபின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பலைக்கு மத்தியில் இ.தி.மு.க வின் இப் புதிய கொள்கைத் திட்டம் பெரும் வரவேற்பை பெறலாயிற்று. இதன் காரண மாக இ.தி.மு.க வை துசித் த அமைப் புகளும் அதனை அங்கீகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. எனினும் மொழிப்பிரச்சினை மற்றும் அதிகாரப் பரவல் தொடர்பாக தமிழரசுக் கட்சித் தலைவர் திரு. செல்வநாயகம் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைவர் திரு. எஸ். டபிள்யு. ஆர். டி பண்டாரநாயக்க அவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழி அமுலாக்கல் மற்றும் அதிகாரப் பரவல் தொடர்பாக ஓர் இணக்கார் காணப்பட்டது. இதன் விளைவாக இவ் விடயத்தை உள்ளடக்கிய மசோதாவொன்றினை திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசு 1957-மே-17ந் திகதி அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. தமிழர்களுக்கு நாடு காட்டிக்கொடுக்கப்படுகிறது என பேரினவாத சக்திகள் இம்மசோதாவிற்கு எதிராகக் கிளம்பியதுடன் இம்மசோதாவிற்கு எதிராக கண்டிக்கு பாதயாத்தி ரை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஐக்கியா தேசியக் கட்சியைச் சார்ந்த திரு. ஜே. ஆர். ஜயவர்தன அவர்கள் ஈடு பட் 11 ருந்தார். இவ் வேளையில் தமிழரசுக் கட்சியினரும் இ. தி. மு .க வினரும் தமிழ் மக்கள் மத்தியில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர்.
இதேவேளை பிற்போடப்பட்ட யாழ்நகர மாநாட்டினை இ. தி. மு. க. 1958மே 24, 25 களில் நடாத்த தீர்மானித்ததுடன் தமிழரசுக்கட்சியினர் 1958 மே 25ம் திகதி வவுனியாவில் சிறப்பு மாநாடு ஒன்றினை நடாத்த தீர்மானித்திருந்தனர். மொழிப்பிரச்சினையில் தீவிரமாக இய ங் கிய இரு அமைப்புகளும் முறையே யாழ்பாணத்திலும் வவுனியாவிலும் கூட்டங்களை நடாத்த முனைந்தமையை கண்ணுற்ற) பேரினவாத சக்திகள் தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் அணிதிரண்டு தென்னிலங்கையை ஆக்கிரமிக்கப் போகின்றனர் எனும் வதந்தியை பரப்பினர். குறிப்பாக கே. எம். பி. ராஜரட்ன தலைமையில் இயங்கிய ஜாதிக விமுக்தி பெரமுன (தேசிய விடுதலை முன்னணி) இப்பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக இனக் கலவரம் தெ ன் னிலங் கையில் தோற்றுவிக்கப்பட்டதுடன் பல நுாறுதமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
இச் சந்தர்ப் பத்தில் யாழ் பாணத்தில் மாநாட்டை நடாத்தி திரு. இளஞ்செழியனின் தலைமையின் கீழ் தென்னிலங்கை திரும்பிய இ. தி. மு. க. உறுப்பினர்கள் சிங்கள மொழிச் சட்டத்தின் படி பேரூந்துகளில் சிங்கள எழுத்தான 5 யை பொறுத்த வேண்டும் எனும் கட்டளையை மீறி தமது தமிழ் ஸ்ரீ எழுத்தினையையும் சிங்கள 6 எழுத்தினையும் பொறுத்தி தென்னிலங்கை திரும்பிய வேளை கண்டி முல்கம்பளை என்னுமிடத்தில் சிங்கள இன வெறியர்களால் வழிமறிக்கப் பட்டு தாக்கப்பட்டனர். அவ்விடத்தில் வாழ்ந்த சமசமாஜக் கட்சியினர் இதனைக் கேள்வியுற்று தாக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்து சிங்கள இனவெறியர்களை பிடித்து பொலீசிடம் ஒப்படைக்கலாயினர். இவ் வின வெறியர்களுக் கு மூன் று வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதேவேளை தென்னிலங்கையின் கொழும்பு நகரம் உட்பட பல நகரங் களில் சமசமாஜக் கட்சி உறுப் பினர்கள் இனவெறியர்களை அடித்து துரத்தி தமிழ் மக்களை காப்பாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ் மக்களுக்கெதிராக தென்னிலங்கை பகுதிகளில் சிங்கள இன வெறியர்களால் மேற் கொள் ளப் பட்ட படுகொலைகளு ம் , தாக்குதல்களும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய வாதம் மேலும் ஆழமாக வேரூன்ற வழிசமைத்தது. இவ்வினக்கலவரத்துடன் தமது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாத தமிழரசுக்கட்சியினரும் இ.தி.மு.க னரும் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து மற்றும் அதிகாரப்பரவல் முதலிய கோரிக்கைகள் தொடர்பான பிரச்சாரக்கூட்டங்களை தொடர்ந்து முன் னெடுத்தனர். தமிழரசுக் கட்சியினரும் ஏனைய வடகிழக்கு அமைப்புகளும் வடகிழக்கு பகுதிக்குள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் இவ்வினக்கலவரத்தின் பின்னரும் மலையகம் மற்றும் சிங்கள பகுதிகளில் மேற்கூறிய கோரிக்கைகளுடன் மலையக மக்களின் பிரஜாவுரிமைக் கோரிக்கையையும் முன்வைத்து தமது பிரச்சாரக் கூட்டங்களை இ.தி.மு.க.வினர் அச்சமின்றி நடாத்தலாயினர். இ.தி.மு.க. தென்னிலங்கை நகரங்களில் துணிந்து மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டங்கள் சிங்கள இனவாதிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. தமிழக தி. மு. க. வுடன் இணைத்து வடகிழக்கையும் மலையகத்தையும் தமிழ் நாட்டுடன் இணைத்து தனியான தமிழ் நாட்டினை உரு வாக்கப் போகின் றனர் எனும் கருத்து வளர்ந் தோங்கியது. இ.தி.மு.க வை தமிழக தி. மு. க வின் கிளை மற்றும் நாம் தமிழர் இயக்கம் என பெயர்சூட்டி இ தி. மு. க விற்கு எதிரான இனவாத பிரச்சாரத்தை இனவாதிகள் மேற்கொள்ளலாயினர். தமிழக நாம் தமிழர் இயக்கத் தலைவர் ஆதித்தனார் தமிழகம், இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் என்ற நாடுகளை உள்ளடக்கி அகண்ட தமிழ் இராச்சியம் கொள்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் கொழுந்து விட்டெரியும் இனவாத சூழலுக்கு மத்தியில் இ.தி.மு.க மிக சாதுரியமாகவும் யதார்த்தமாகவும் சிங்கள மக்களை அரவணைத்துச் செல்லும் வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது.
இடதுசாரி அரசியல் கருத்துக்களை தம் சீர்திருத்த கருத்துக்களுடனும் தமிழ் தேசியவாதக் கருத்துக்களுடன் இணைத்துக் கொண்டமையே இதற்கான பிரதான காரணமாகும். குறிப்பாக இ.தி.மு.கவின் தலைவர் ஏ. இளஞ்செழியனும் முன்னணி உறுப்பினர்களும் இலங்கை சமசமாஜக் கட்சியினருடன் கொண்டிருந்த தொடர்பு மற்றும் இக்காலகட்டத்தில் இலங்கை சமசமாஜக் கட்சி தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பாகவும் அதிகார பரவல் தொடர்பாகவும் சரியான நிலைப் பாட்டினைக் கொண்டிருந்தமை என்பன இதற்கான காரணங்களாகும்.
1959ம் ஆண்டு அக்டோபர் 25ம் திகதி கொழும்பு நாராயண குருமண்டபத்தில் இ.தி.மு.க ஓர் பிரச்சாரக்கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது. இக்கூட்டத்திற்காக வெளியிட்ட துண்டு பிரசுரத்தில்
வகுப்பு வாதம் ஒழிக! வெல்க தமிழ்!!
தேசிய ஐக்கியம் மலர்க!! ஐக்கிய இலங்கைக்காக! சிங்களவர் தமிழர் ஒற்றுமைக்காக! சமதர்ம குடியரசு அமைப்புக்காக!!! (17) என குறிப்பிட்டுள்ளதுடன் பிரதான பேச்சாளர்கள் இக்குறிக்கோள்களை தமது சொற்பொழிவுகளின் போது வலியுறுத்தி வந்தமையினால் கூட்டம் நடாத்தப்படும் சிங்களப்பகுதிகளின் கீழ்மட்ட சிங்களப் பொதுமக்களின் ஆதரவை இ. தி. மு. க. வினர் பெறக்கூடியதாக இருந்தது. இதே ஆண்டு இ.தி.மு.க வின் நீர்கொழும்பு மாவட்டச் செயலாளர் திரு. கே. பி குணசீலர் பொதுக்கூட்டமொன்றையும், ஊர்வலம் ஒன்றினையும் நீர் கொழும்பில் ஒழுங்கு செய்திருந்தார். இவ் வூர் வலத் தையும் கூட்டத் தையும் நடாத் த விடாது சுற்றி வளைத் துக் கொண்ட சிங் களக் காடையர்களுக்கு மேற் படி இ.தி.மு.க வின் கொள்கையை திரு. ஏ. இளஞ்செழியன் விளக்கியதுடன் அவர்களும் கூட்டத்தில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும், இவ்வாறு தென்னிலங்கை மக்களின் பிரச்சினைகளுடன் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கான போராட்டத்தை இ.தி.மு.க வினர் முன் னெடுத்த போதிலும் இவ்வியக்கத்தினை ஓர் தமிழ் இனவாத இயக்கமாகப் பிரச்சாரம் செய்வதினை சிங்கள இனவாத சக்திகள் நிறுத்திக் கொள்ளவில்லை.
இனக்கலவரத்தின் பின்னரும் தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் வலுவடைந் து வந்தமையினாலும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்த திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க தமிழரசுக் கட்சித்தலைவர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் அமுல்படுத்த முனைந்தார். இம்முயற்சியின் ஓர் விளைவாக திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க அவர்கள் தம் கட்சி அங்கத்தினர்கள் மத்தியில் தமிழ் மக்களின் நியாயமான உரிமையை ஏற்கச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். படம்
இனக்கலவரத்திற்குப் பின்னர் 1959 மே 17ம் திகதி அன்று குருநாகல் நகர மண்டபத்தில் நடந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 7வது அமர்வில், கடந்த வருடம் நாடு கடுமையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தது. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வளரும் இன வாத பதற்ற நிலை பரந்த கட்டுப் பாடற்ற தன் மையுடன் வெடிப்புற்றதுடன் மே மாத இறுதிவரை பரவியது. இது அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. நிலைமை மிக விரைவில் நியாய மான ரீதியில் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் இக்காலகட்டத்தின் துன்பகரமான சம்பவங்கள் ஆகக் குறைந்தது சில நன்மைகளைத் தரும். இனவாத வித்தியாசங்களை பெருமளவு கொண்டு சென்றதன் மூலம் கடும் பிரதிபலனை உருவாக்கிய தீவிரவாதிகள் உட்பட அனைவருக்கும் இது ஞாபகத்திலிருக்கச்செய்யும். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் உருவாகும் என நான் நினைக்கவில்லை. (18) என உரையாற்றி தாம் முன்வைத்த இரு மசோதாக்களை நிறைவேற்றுவற்கான ஆணையை தமது கட்சி அங்கத்தவர்களிடம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆயினும் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க இனவாத சக்தியினால் ஒரு சில மாதங்களின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். 1959 செப்டம்பர் 25ம் திகதி திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதுடன் பண்டா-செல்வா ஒப்பந்தமும் கைவிடப்பட்டது.
திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவின் மறைவுடன் அவரால் முன்வைக்கப்பட்ட மசோதாக்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கைவிட்டதுடன் நாடு ஓர் பொதுத்தேர்தலை சந்தித்தது. இச் சந்தர்ப்பத்தில் பொதுத்தேர்தலின் போது எப்பிரிவினரை ஆதரிப்பது என்ற பிரச்சினை இ.தி.மு.க வினர் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக 1959 டிசெம்பர் 17ம் திகதி திரு. ஏ. இளஞ்செழியனின் தலைமையில் கூடிய இ.தி.மு.க பொதுச்சபை தமிழ் மொழிக்கு சம அந்தஸ்தினை வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மற்றும் சமதர்ம ஆட்சியினை உருவாக்குவதற்கான கொள்கையை முன் வைத்துள்ள இலங்கை சமசமாஜக் கட்சியினை ஆதரிப்பதென தீர்மானித்தது. இதன்படி 1960 மார்ச்சில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சமசமாஜ கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக்கூட்டங்களை நடாத்திய து. போதியளவு பெரும்பான்மையை ஸ்ரீ. ல சு. க. கொண்டிராமையினால் 1960 ஜூலையில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது.
1960 ஜூலையில் நடந்த பொதுத்தேர்தலின் போது இ. தி. மு. க. சமசமாஜ கட்சியினருக்கு ஆதரவு வழங்காது தமிழரசுக் கட்சியினருக்கு ஆதரவு நல்கியது. இலங்கை சமசமாஜ கட்சியினர் 1960 மார்ச் பொதுத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கெதிராக 120 தொகுதிகளில் போட்டியிட்டதுடன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கடைப்பிடிக்கும் இனவாத நிலைப்பாட்டினை வன்மையாகக் கண்டித்தது. ஆனால் 1960 ஜூலையில் நடந்த பொதுத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றினை செய்து கொண்டது. சமதர்மக் கொள்கைக்காகவும் மொழி சம அந்தஸ்திற்காகவும் முன் நின்ற சமசமாஜக் கட்சியினர் நான் கு மாதங்களுக் கு ள் அக் கொள்கைகளுக்கு எதிரான நிலைப் பாட்டினைக் கொண்ட ஸ்ரீ ல. சு. க. யுடன் போட்டித் தவிர்ப்பினை மேற் கொண்டமை அக்கொள்கைகளின் காரணமாக நட்புறவைப் பேணிய இ.தி.மு.க வினை சிக்கலுக்குள்ளாக்கியது.
| லங்கா சமசமாஜக் கட்சியின் இந் நிலைப்பாட்டினை கண்டித்த இ. தி. மு. க. மொழிக்கொள்கைக்காகவும் அதே நேரத்தில் மலையக மக்களின் பிரஜாவுரிமைக்காகவும் குரலெழுப்பும் தமிழரசுக் கட்சிக்கு வடகிழக்கு பகுதிகளில் ஆதரவு வழங்குவது எனத் தீர்மானித்தது. அத்துடன் ஏனைய மாகாணங்களில் இ.தி.மு.க கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதெனவும் தீர்மானித்தது. இ. தி. மு. க. வின் இந்நடவடிக்கை நாளடைவில் இ.தி.மு.க தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட வழிசமைத்தது.
வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் "குரலெழுப்பிய தமிழரசுக் கட்சியினர் மலையக மக்களின் குடியுரிமைக்காகவும் குரலெழுப்பி வருவதால் அக்கட்சியினருடன் கூட்டுச்சேர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இலகுவில் இப்பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடிய நிர்ப்பந்தத்தினை அரசுக்கு ஏற்படுத்தலாம் எனும் நிலைப்பாட்டினை இ.தி.மு.க அறுபதுகளின் இறுதியில் மேற்கொண்டது. இந்நிலைப்பாட்டினை அமுல் படுத்தும் வகையில் 1960 டிசெம்பர் 17ம், 18ம் திகதிகளில் கூடிய இ.தி.மு.க பொதுச் சபை மேற் கூறிய நிலைப் பாட்டி னை ஏக மான தாக ஏற்றுக் கொண்டதுடன் 1961 ஜனவரி 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியினர் நடாத்தவுள் ள சத்தியாகிரகப் போராட்டத்தில் இ.தி.மு.க உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனும் தீர்மானத்தையும் மேற்கொண்டது.
இச் சத்தியாகிரகப் போராட்டத்தைப் பற்றியும் மலையகத்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கு பற்றுவதன் அவசியத்தை அறிவுறுத்தும் வகையில் இ.தி.மு.க 10-12-1960 அன்று கலாசார மாநாடு ஒன்றினை பண்டாரவளை நகர மண்டபத்தில் நடாத்தியது. இம்மாநாட்டில் தமிழரசுக் கட்சி தலைவர்களான மட்டக்களப் பினைச் சார்ந்த மறைந்த சாம் தம்பிமுத்து. எம். திருச்செல்வம், கியூ.சி மு.மாணிக்கம் என்போர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் போது திரு. ஏ. இளஞ்செழியன் மலையகத் தமிழர் இப்போராட்டத் தில் இணைவதற்கான அவசியத்தைப்பற்றி வலி யுறுத்தலானார். இதன் விளைவாக மலையக இளைஞர்கள் திரு. இளஞ்செழியன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
அது நாள்வரை வடகிழக்கு மக்களால் தனித்து முன்னெடுத்த போராட்டங்களை போலல்லாது இச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மலையக மக்களும் பங்கு கொண்டமை அன்றைய ஆட்சியாளர்களைத் திணற வைத்தது. இச்சத்தியாக்கிரகம் இராணுவத்தினைக் கொண்டு முறியடிக்கப்பட்டதுடன் மலையகப் பிரேதசங்களுக்கும் இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. இச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கின் தலைவர்கள் கைது செய் யப் பட்டு தடுப் புக்காவலில் 10 வைக்கப்பட்டனர்.
இ.தி.மு.க. வின் பிரவேசம் காரணமாக மலையகத்தின் பாரிய தொழிற்சங்கங்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், ஜனநாயக தொழிலாளர் காங்கிரசும் ஓர் நிலைப்பாட்டினை மேற்கொள்ள நேர்ந்தது. இ.தி.மு.க. வின் ஆதரவுடன் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கொழும்பு புல்லர்ஸ் வீதியில் உள்ள ஈழநாடு பத்திரிகையைச் சார்ந்த கே. எஸ். தங்கராசாவின் இல்லத்தில் ஓழுங்கு செய்யப்பட்டது. தமிழ் காங்கிரசைச் சார்ந்த எம். சிவசிதம்பரம் கம்யூனி ஸ்ட் கட்சியைச் சார்ந்த தொழிற்சங்கத் தலைவர்களான எஸ். நடேசன் , ரொசாரியோ பர்ணான்டோ , இலங்கைத் தொழிலாளர் காங்கிரசைச்சார்ந்த கே. இராஜலிங்கம், இ தி. மு. க வைச்சார்ந்த ஏ. இளஞ்செழியன், மு. அ. வேலழகன் மற்றும் தமிழ் அபிமானிகளான சேர். கந்தையா வைத்தியநாதன், டாக்டர் பொன்னையா என்போர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் தலைவர்களை விடுதலை செய்யும் வரை மற்றும் மலையக மக்களின் குடியுரிமை உட்பட தமிழ் மக்களின் உரிமைகளை பெறும் வரை பொது வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவேண்டுமெனும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் மலையகத்தில் போராட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பினை முறையே ஏ. இளஞ்செழியன், மு.அ. வேலழகன் எஸ். நடேசன், ரொசாரியோ பர்ணாந்து என்போரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெற்றியீட்டும் வரை வேலைநிறுத்தத்தைத் தொடருவோம் என சபதமெடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேலை நிறுத்தத்தை மேற் கொண்ட மறுதினமே அரசின் நிர்ப்பந்தத்திற்கு இணங் கி வேலைநிறுத்தத்திலிருந்து வாபஸ் பெற்றுக் கொண்டது. ஓர் நீண்ட பொது வேலை நிறுத்தத்திற்கு தம்மை தயார் செய்திருந்த தோட்டத் தொழிலாளர்கள் இதனால் பெரும் ஏமாற்றத்திற்கும் கடன் சுமைக்கும் ஆ ளான துடன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தினையும் தவறவிட்டனர்.
சத்தியாக்கிரகப் போராட்டத்துடன் இ. தி. மு. க. விற்கும் தமிழரசுக் கட்சிக்கும் நல்லுறவு மேலும் வலுவடைந்து இ. தொ. கா, ஜ.தொ.கா.. என்பவற்றிற்கு மாற்று சக்தியாக இ.தி.மு.க. வை தமிழரசுக் கட்சியினர் கணிக்கலாயினர். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இ. தி. மு. க. வுடன் உத்தியோக பூர்வமாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள முனைந்தனர். தமிழீழத்தின் சுபாஷ் சந்திரபோஸ் என் அழைக்கப்பட்ட அரசு ஊழியரான திரு. இராசரத்தினம் இ.தி.மு.க பொதுச் செயலாளர் திரு. ஏ. இளஞ்செழியனை தடுப்புக் காவலிலுள்ள திரு. அ. அமிர்தலிங்கத்தின் உறவினர் எனக்கூறி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எஸ். எம். இராசமாணிக்கம், அ. அமிர்தலிங்கம், டாக்டர் இ. வி. எம். நாகநாதன் ஆகியோருடன் திரு. ஏ. இளஞ்செழியன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது மொழியுரிமைக் கோரிக்கையுடன், மலையக மக்களின் குடியுரிமைக் கோரிக்கையும் தமிழரசுக்கட்சி முன்வைக்கின்றமையினால் இ.தி.மு.க. தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைந்து செயற் படுவது பற்றி கலந்துரையாடப்பட்டது.
தமிழரசுக்கட்சியுடன் கூட்டிணைந்து செயற்படுவது தொடர்பாக கலந்துரையாட இ.தி.மு.க இதேயாண்டு பண்டாரவளை மாவட்ட கிளை சார்பாக கூட்டமொன்றினை நடாத்தியது, தமிழரசுக் கட்சியின் சார்பாக திரு. திருச்செல்வம் கியூ. சி. அக்கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், சமஷ்டி ஆட்சி கிடைத்தால் மலையகத்திற்கு எவ்வாறான நன்மை கிடைக்குமென இ.தி.மு.க உறுப்பினர் கேள்வியெழுப்பினர். தடுப்புக்காவலிலுள்ள தலைவர்கள் விடுதலை பெற்று வந்தவுடன் மற்றும் லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் தந்தை செல்வா நாடு திரும்பியதும் இக்கேள்விகளுக்கு பதிலளிப்பார் என திரு. திருச்செல்வம் கூறியதுடன் இதனையொத்த பிறிதொரு கூட்டம் நுவரெலி யா நகரில் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றும் நடாத்தப்பட்டது.
நுவரெலியாவில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை பெற்ற திரு. அ.அமிர்தலிங்கம் எம். சிவசிதம்பரம், திருமதி. மங்கையர்க்கரசி முதலியோர் கலந்து கொண் டதுடன் பங்கு பற்றுநர்களின் கேள்விகளுக்கு இவர்கள் விடையளித்தனர். இவ்விரு கூட்டங்களின் பின்னர் தமிழரசுக்கட்சியினருடன் கூட்டிணைந்து செயற்படும் தீர்மானத்தை இதிமுக. வினர் மேற்கொண்டனர்.
சான்றாதாரங்கள்:
14. மு. கருணாநிதி-நெஞ்சுக்கு நீதி முதல் பாகம் ப.291-92
15. இ.தி.மு.க துண்டு பிரசுரம் 20-12-1957
16. இ. தி. மு. க கொள்கை விளக்கம் 1957
17. துண்டுப் பிரசுரம் 1959 
18. D. M. Monnekulame, The Abrogation of 9 Pact Daily News 26-04-1993

கருத்துகள் இல்லை: