
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னையிலுள்ள, ப.சிதம்பரம் இல்லத்திலும், காரைக்குடியிலுள்ள இல்லத்திலும், டெல்லியிலுள்ள இடங்களிலும் இன்று ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.
சில மணி நேர ரெய்டுக்கு பிறகு எந்த ஆவணத்தையும் கைப்பற்றவில்லை என அமலாக்கத்துறை கூறியுள்ளது.
சிதம்பரம் கருத்து---
பின்னணி இதுதான்<--- div=""> விசாரணையை சில மணி நேரங்களிலேயே முடித்த அமலாக்கத்துறை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் கூறிவிட்டு கிளம்ப என்ன காரணம்? இதுபோன்ற கேள்விகள் அரசியல் நோக்கர்களிடம் எழுந்துள்ளன. இந்த சூழ்நிலையில்தான், நேற்று உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் அளித்த பேட்டி கவனம் ஈர்க்கிறது.
<--- div=""> வழக்கு ஒதுக்கீடு<--- div=""> உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதுதான் அந்த நால்வரும் சில விமர்சனங்களை முன் வைத்தனர். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடர்புள்ள,
சொராபுதீன் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயாவின் மர்மச்சாவு உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளை சீனியர் நீதிபதிகள் பெஞ்ச்சுக்கு தலைமை நீதிபதி அமித் மிஸ்ரா ஒதுக்கவில்லை என்பது நான்கு நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளில் ஒன்று.
<--- div=""><--- div="">மத்திய அரசு மீது குற்றச்சாட்டு நீதித்துறையில் நடைபெற்ற வரலாறு காணாத இந்த போர்க்கொடி சம்பவம், நாடு முழுக்க நேற்று முதல் விவாதப் பொருளாகியுள்ளது. பாஜக அரசுதான், நீதித்துறையில் நடைபெறும், அமளிகளுக்கு காரணம் என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. இந்த நிலையில்தான் சிதம்பரம் வீட்டில் இன்று சம்மந்தமே இல்லாமல் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளது.
<--- div=""> இதுதான் காரணம்?<-- div=""> சிதம்பரம் தேசிய அளவில் முக்கியமான ஒரு அரசியல்வாதி. அவரது வீட்டில் நடைபெற்ற ரெய்டு காலை முதல் தேசிய ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம் பிடித்தது. ஒன்றையும், ஒன்றையும் கூட்டினால் 2 என்பதை போல, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ரெய்டு நடத்த அதிகாரம் இல்லாத ஒரு அமைப்பு சம்மந்தம் இல்லாமல் சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தியது,
<--- div=""><-- div="">நீதிபதிகள் விவகாரத்தை திசை திருப்பி ஊடகங்கள் கவனத்தை மாற்றிவிடுவதற்கான முயற்சிதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக