வெள்ளி, 12 ஜனவரி, 2018

நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு 280000 ரூபாய் பம்பர் சம்பள உயர்வு ... விமர்சிக்க கூடாதோ? சமுகவலை மீது இந்திராவின் பழிவாங்கல் ?

தலைமை நீதிபதி குறித்து அவதூறு பரப்பியவர் மீது வழக்கு!
மின்னம்பலம் :சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு கோரி நடைபெற்றுவரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சம்பளம் போதாது என்றால்,வேறு வேலைக்குச் செல்ல வேண்டியதுதானே எனக் கூறியிருந்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைப் பணியிலிருந்து நீக்கலாம் என கூறினார்.
இதையடுத்து வந்த விசாரணையின்போது, தான் சொன்னதை திரும்பப் பெறுவதாகக் கூறினார். போக்குவரத்து ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

தலைமை நீதிபதியின் இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. இது குறித்து உயர் நீதிமன்றக் காவல் நிலையத்தில் மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் ராஜகோபாலன் புகார் அளித்தார். இதையடுத்து, அவதூறு பரப்பியவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற காவல்நலைய போலீசார், சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு அந்த நபரைத் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: