சனி, 13 ஜனவரி, 2018

சென்னையில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை .

Kalai Mathi - Oneindia Tamil சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7.30 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் 6 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என கூறப்படுகிறது, அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் அவரது மருமகள் உள்ளதாக கூறப்படுகிறது.  இதேபோல் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காரைக்குடியிலுள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: