திங்கள், 8 ஜனவரி, 2018

லாலு சகோதரி காலமானார் .. லாலு பரோல் கேட்பார் என எதிர்பார்க்க படுகிரகுடு

சகோதரி திடீர் மரணம் லாலுபிரசாத் பரோல் கேட்பாரா?தினத்தந்தி :கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவின் சகோதரி மரணம் அடைந்துள்ளார். இதனால், அவர் பரோல் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாட்னா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்–மந்திரியுமான லாலு பிரசாத்துக்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் 3½ ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சி.பி.ஐ. தனிக் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் லாலு பிரசாத்தின் ஒரே சகோதரியான கங்கோத்ரி தேவி (வயது 73) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று திடீரென மரணம் அடைந்தார். லாலு பிரசாத்தை விட கங்கோத்ரி தேவி 4 வயது மூத்தவர் ஆவார். அவருடைய உடல் இறுதிச் சடங்கிற்காக சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.


இதுபற்றி லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி கூறுகையில், ‘‘அத்தை இறந்த தகவலை ராஞ்சி சிறையில் உள்ள எனது தந்தையிடம் தெரிவித்து பரோலில் வெளியே கொண்டு வருவதற்கு சிறை அதிகாரிகள் மூலம் முயற்சி செய்து வருகிறோம். இன்று (அதாவது நேற்று) வார விடுமுறை தினம் என்பதால் எனது தந்தையால் பரோலுக்கு உடனடியாக விண்ணப்பிக்க இயலவில்லை. நாளை பரோல் பெற முயற்சிப்போம்’’ என்றார்.

லாலுபிரசாத்தின் மனைவி ராப்ரிதேவி கூறும்போது, ‘‘வழக்கில் இருந்து தம்பி விடுதலை ஆகவேண்டும் என்பதற்காக கங்கோத்ரி தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார். ஆனால் தண்டனை அறிவிக்கப்பட்ட அதிர்ச்சியில் அவர் இறந்துவிட்டார்’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: