சசிகலா, தினகரனைச் சார்ந்து நாங்கள் இல்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன் நிர்வாகிகளை நியமித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கிறது. எனவே அதுகுறித்து இப்போது எதுவும் கூற முடியாது.
ஆனால், தினகரன் அறிவித்துள்ள புதிய நிர்வாகிகளின் நியமனம் கேள்விக்குறியாகவே உள்ளது. நாங்கள் சசிகலா, தினகரனைச் சார்ந்து இல்லை என்கிற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம்'' என்றார்.
முன்னதாக, அதிமுக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த டிடிவி தினகரன் ஆக்ஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிமுகவின் புதிய நிர்வாகிகளின் பட்டியலையும் வெளியிட்டார். இந்த சூழலில் சசிகலா, தினகரனைச் சார்ந்து நாங்கள் இல்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக