வியாழன், 10 ஆகஸ்ட், 2017

தொழிலதிபர் விஜய் சிங்கானியா தெருவுக்கு துரப்பட்டார் .. ரேமண்ட்ஸ் நிறுவனர்.. ஆயிரம் கோடியை மகனுக்கு கொடுத்த

மிகப் பெரும் கோடீஸ்வராக இருந்த ரேமண்ட்ஸ் நிறுவனர் மகனால் துரத்தப்பட்டதால், பண வசதியின்றி வறுமையில் தவித்து வருகிறார். வீதிக்கு துரத்திய மகன்: கோடீஸ்வரானாக வாழ்ந்த ரேமண்ட்ஸ் நிறுவனர் வறுமையில் வாடும் அவலம் இந்தியாவின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கியவர் ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய் சிங்கானியா, இவர் முதுமை மற்றும் ஓய்வை கருத்தில் கொண்டு தனது வணிகப் பொறுப்புகளை மகன் கவுதமிடம் கொடுத்திருந்தார். இந்நிலையில் விஜய் சிங்கானியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தன்னை அனுமதிக்க மறுப்பதாகவும், அதுமட்டுமின்றி மகன் கவுதம் தன்னை தாக்குவதால், குடியிருப்பை தர உத்தரவிடுமாறும் கோரியுள்ளார். மேலும் சுமார் ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குக்ளை தனது மகனுக்கே கொடுத்துவிட்டதாகவும், இதனால் தற்போது பணமின்றி இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேமண்ட்ஸ் நிறுவனம் இது தொடர்பாக உத்தரவிட வேண்டும் என்றும் கூறி வழக்கை 22-ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார். மாலைமலர்

கருத்துகள் இல்லை: