பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள லூஸான் தீவில் இன்று 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் தலைநகர் மணிலாவின் அருகே அழகிய கடற்கரைகள், மலைகள் மற்றும் பவளப்பாறைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொண்ட லூஸான் தீவு அமைந்துள்ளது.
இந்நிலையில், லூஸான் தீவின் வடகிழக்கே மணிலாவில் இருந்து சுமார் 73 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புட்டோல் பகுதியில் இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் சுமார் 168 மிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் மணிலாவிலும் உணரப்பட்டது. அதிபரின் மாளிகை, வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் மற்றும் அந்நாட்டின் உச்சநீதி மன்றத்தில் பணியாற்றும் அனைவரும் அவசரமாக வெளியேற நேர்ந்தது. அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளின் நடுப்பகுதியில் தஞ்சம் அடைந்தனர்.
பள்ளி, கல்லூரிகளில் இருந்த மாணவிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். புவியியல் அமைப்பின்படி, அடிக்கடி நிலநடுக்கத்துக்குள்ளாகும் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் மிதமாகவும், மிகையாகவும் ஆண்டுதோறும் சுமார் 7 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. maaliamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக