திங்கள், 7 ஆகஸ்ட், 2017

Facbook பெண்கள் மீது பாலியல் வார்த்தை வன்முறை.. அளவே இல்லையா?


Lulu Deva Jamla : இந்த ஸ்க்ரீன்ஷாட்ல இருக்கிற மெசேஜஸ் மாதிரி எனக்கு தினமும் குறைஞ்சது 50 மெசேஜஸ் வந்துகிட்டிருக்கிறதால கடேசி கடேசியா இந்த பதிவு...
முக நூல் என்ற சமூக வலைத்தளத்தை நீங்கள் எல்லாரும் எதற்காய் உபயோகித்து வருகிறீர்கள் என்று எனக்கு தெரியாது... தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லை...
நான் இங்கு வருவது என் சிந்தனைச் சிதறல்களை
பகிரவும், எனக்கான நட்புகளை கண்டுபிடித்து உறவுகளை உருவாக்கி கொள்ளவும் தான். என்னுடைய எழுத்துக்கள், என் டைம்லைன் எப்படி இருக்க வேண்டும், அதில் யாரை கமெண்ட் இட அனுமதிக்க வேண்டும், யாரை ப்ளாக் செய்ய வேண்டும் என்பதெல்லாவற்றையும் தீர்மானிப்பது நான், நான் மட்டுமே!

நீ எந்த நாயாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை! என் எழுத்துக்களின் கீழ் எனக்கு பிடித்தவிதத்தில் உன் கமெண்ட் இல்லாதிருந்தால் உன்னை தூக்கி கடாசுவதோடு உன் கருத்தையும் கருப்புவேன். இதற்கு நான் எந்த கஸ்மாலத்துக்கும் விளக்கம் தர வேண்டிய அவசியமில்லை!
உங்கள் தரத்தினரோடு நிறுத்திக் கொள்ளுங்கள் இது போன்ற உங்கள் காமெடிகளை!
உன் போன்றோர் கற்பனைக்கும் எட்டாத உயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நானும் என்னைச் சார்ந்தோரும்... வாசிப்பு, எழுத்து, குடும்ப பராமரிப்பு, வேலை, வாரயிறுதி கொண்டாட்டங்கள் ஆகிய வாழ்தலுக்கிடையே நாங்கள் செலவழிக்கும் ஒரு சில இணைய மணித்துளிகளையும் உன் போன்ற imbeciles க்கு பதில் கூறி விரயம் செய்வதில் விருப்பம் இல்லை. உன் போன்றோரின் கேலிக்கூத்துக்களை ரசிக்கும் அளவிற்கு எங்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து விடவில்லை. எனவே என் சார்ந்தோரின் இணைய வாழ்க்கையில் இனிமேல் இப்படி தலையிட முனைய வேண்டாம் அற்பர்களே!
இதுவே உன் போன்ற அறிவிலிகளுக்கான என் இறுதி பதிலாய் இருக்க வேண்டும் என்ற அவாவுடன்...

கருத்துகள் இல்லை: