செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

கர்நாடக வங்கி ஊழியர்கள் கன்னட மொழியை படிக்க உத்தரவு! 6 மாதம் கெடு .. சித்தராமையா அதிரடி!

பெங்களூரு: கர்நாடகாவில் பணிபுரியும் பிற மாநில வங்கி ஊழியர்கள், 6 மாதத்தில் கன்னடம் கற்காவிட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கன்னடா வளர்ச்சி ஆணையம் சார்பில் தேசிய மையமாக்கப்பட்ட, கிராமப்புற உள்ளிட்ட அரசு வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கன்னடம் பேசாத மக்கள் அம்மொழியை கற்பதற்கு 6 மாத காலம் அவகாசம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னடா வளர்ச்சி ஆணையத்தின் தலைவரான அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா, வங்கி ஊழியர்கள் 6 மாதத்திற்குள் கன்னட மொழியை கற்றுக் கொள்ளாவிட்டால் ஆட்சேர்ப்பு விதிமுறைகளின்படி, அவர்களை பணியில் இருந்து நீக்குமாறு வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்தி மொழியை பரப்புவதற்காக எல்லா வங்கி கிளைகளிலும் எப்படி இந்தி மொழி பிரிவுகள் திறக்கப்பட்டதோ அதேபோல் கன்னட மொழிக்கான பிரிவுகளை வங்கிகள் திறக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.dinamani

கருத்துகள் இல்லை: