ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா பொன்.ராதாகிருஷ்ணனனை மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக வீடியோ

Veera Kumar Oneindia Tamil டெல்லி: குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கையா நாயுடுவிற்கு பொன்னாடை போர்த்து வாழ்த்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டி கட்டிய ஒரு தென் மாநிலத்துக்காரர் குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமையளிப்பதாக பாஜக தமிழக பிரிவு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ள நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். Pon RadhaKrishnan who was insulted by Venkaiah Naidu?


பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் இந்த குட்டி வீடியோவை ஷேர் செய்துள்ளார். அது வைரலாகியுள்ளது. வெங்கையா நாயுடுவிற்கு பொன்னாடை போர்த்த முயலும்போது வேறு ஒருவர் குறுக்கிட்டு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார். அந்த நபர் பார்க்க கொஞ்சம் எம்.பி.தருண் விஜய் ஜாடையில் உள்ளார். இதனால் தாமதிக்கும் பொன்னார் மீண்டும், காத்திருந்து பொன்னாடை போர்த்துகிறார். பிறகு அங்கேயே நின்றபடி மலர் கொத்தை எடுத்து கொடுக்கிறார். மலர் கொத்தை வாங்கிய வெங்கையா நாயுடு, போங்க, போங்க என்பதை போல கையால் ஜாடை காட்டி ஏறத்தாழ பொன்.ராதாகிருஷ்ணனை விரட்டிவிடுவதை போல அனுப்புகிறார். பொன்.ராதாகிருஷ்ணனும் அப்படியே கிளம்பி செல்கிறார். இந்த வீடியோவை பார்த்து, சமூக வலைத்தளங்களில் பாஜக மேலிட தோரணைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை: