மின்னம்பலம் : தமிழில் மெல்ல மெல்ல வெப் சீரிஸ் ஃபீவர் பரவ
ஆரம்பித்துவிட்டது. இயக்குநர் பாலாஜி மோகன் வெளியிட்ட As I am suffering
from Kaadhal-க்குக் கிடைத்த வரவேற்பு திரைப்படத்துறையில் உள்ள முக்கியமான
கதாநாயகர்கள், கதாநாயகிகளைக்கூட இந்தப் பக்கம் இழுத்து வந்துள்ளது. தமிழ்
சினிமா கதாநாயகிகளில் அழகை விட நடிப்பால் அதிகம் பேசப்பட்டவர்களின்
பட்டியல் அவ்வளவு நீளமானதல்ல. குறிப்பிட்ட சில நடிகைகள்தான் இந்த ஒரு
காரணத்துக்காக அதிகம் பேசப்பட்டவர்கள். அதில் சமீபத்தில் சேர்ந்தாலும்
அழுத்தமாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பதிந்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை போன்ற பல படங்களில் அவரது
நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கும் சற்று முன்னால் எந்த நடிகை
நடிப்புக்காக அதிகம் பேசப்பட்டவர் என்றால் சந்தேகமே இல்லாமல் கூறலாம்
‘பருத்தி வீரன்’ புகழ் பிரியாமணிதான் என்று. தமிழ் சினிமாவின் முக்கியமான
இந்த இரு கதாநாயகிகளும் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ்தான் G-spot.
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் தலைமை நிகழ்ச்சி தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய விஜய் ரமேஷ் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார். பெண்களின் பிரச்னையை அடிப்படையாகக்கொண்டு உருவாக இருக்கும் இந்தத் தொடரில் ஐஸ்வர்யா சமூக செயல்பாட்டாளராகவும் அவருக்கு ஜோடியாக மாயா படத்தில் நடித்திருந்த ஆரியும் நடிக்கின்றனர். பிரியாமணி முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். SS Music தயாரிக்கும் இந்தத் தொடரின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐஸ்வர்யா தமிழில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் முக்கியமான நடிகையாக வலம்வருவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்பது அவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் மற்ற மொழி திரைப்படங்களுக்கும் சம அளவில் அவர் கொடுக்கும் முக்கியத்துவமுமே காட்டுகிறது. ‘Daddy’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்துள்ள அவர், துல்கர் சல்மானுடன் ஜோடி சேர்ந்து ‘ஜோமோண்டே சுவிசேஷங்கள்’ திரைப்படம் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகியுள்ளார். மீண்டும் துல்கருடன் இணைந்து நடித்துள்ள ‘சோலோ’ படமும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் செப்டம்பர் மாதம் வெளிவர உள்ளது. இதுதவிர கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம் ’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ என அடுத்தடுத்து முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் புதிய ஊடகமான வெப் சீரிஸிலும் அவர் கவனம் செலுத்துவது அவரை மற்ற கதாநாயகிகளிடமிருந்து தனித்து காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக