வியாழன், 10 ஆகஸ்ட், 2017

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஊழல் குற்றசாட்டு... பதவி நீக்கம்...

Devarajan Oneindia Tamil கொழும்பு: இலங்கை மத்திய ரிசர்வ் வங்கியின் கடன் பத்திர வெளியீட்டில் ஊழல் நடந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரவி கருணநாயகே மீது புகார் எழுந்தது. அதனையடுத்து ரவி கருணநாயகே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையின் மத்திய ரிசர்வ் வங்கி நடத்திய கடன்பத்திர வெளியீட்டில், மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதன்பேரில் ரவி கருணநாயகே உள்பட பல முக்கிய பிரமுகர்கள் சந்தேக வளையத்தில் சிக்கியுள்ளனர்.
 குறிப்பாக முன்னாள் நிதியமைச்சரும், இந்நாள் வெளியுறவு அமைச்சருமான ரவி கருணநாயகே, இந்த ஊழலில் கிடைத்த பணத்தை வைத்து, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியதாகவும் புகார் கூறப்படுகிறது. இதன்பேரில், ரவி கருணநாயகே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி தொடர்ந்து பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, தனது அரசியல் வாழ்வுக்கு, மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் இத்தகைய மோசடியை செய்துவிட்டதாகவும் கூறி ரவி கருணநாயகே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த அறிவிப்பை இன்று வெளியிட்ட அவர் நான் ஒருபோதும் தவறு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: