புதன், 14 செப்டம்பர், 2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன திரிவேதி தெரிவித்தள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த இளங்கோவன், அந்த பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 4 மாதங்களாக தலைவர் நியமனம் இல்லாமல் இருந்தது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் உடனடியாக தலைவரை அறிவிக்க வேண்டும் என்று கட்சியினர் மேலிடத்திற்கு வலியுறுத்தி வந்தனர். 8 பேருக்கும் மேலாக இந்த பதவிக்காக பல நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார். திருநாவுக்கரசருக்கு கட்சியினர் பலர் நேரில் சென்று இனிப்புகள் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். படங்கள்: அசோக்குமார் nakkheen.in

கருத்துகள் இல்லை: