திங்கள், 12 செப்டம்பர், 2016

பெங்களூரில் 65 தமிழக சொகுசு பேருந்துகள் - 27 லாரிகள் எரிப்பு!


பெங்களூருவில் உள்ள மைசூர் சாலையில் தனியார் பனிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த கே.பி.என், எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான 65 பேருந்துகளை தீ வைத்து கொளுத்தினர் கன்னடர்கள். இந்த கொடூர சம்பவத்தில் 45 பேருந்துகள் முற்றிலும் எரிந்து சேதமாகின. ஒரே நிறுவனத்திற்கு சொந்தமான 38 பேருந்துகள் எரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சேலத்தை மையமாகக்கொண்டு செயல்படுகிறது கே.பி.என். நிறுவனம். தனது நிறுவன பேருந்துகள் எரிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார் கே.பி.என் நிறுவனர் நடராஜன். மைசூர் சாலையில் லாரிகள் நிறுத்திவைக்கப்படும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 27 தமிழக லாரிகள் தீவைத்து எரித்தனர் கன்னடர்கள். இந்த சம்பவத்தில் லாரிகளில் இருந்த பல கோடி ரூபாய் சரக்குகளும் சேதமடைந்தன. காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டதைக் கண்டித்து பெங்களூர் முழுவதும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இல்லாததால் இந்த பேராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. பெங்களூரில் வசிக்கும் தமிழக மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி வருகின்றனர். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்ககள் தாக்கப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. மைசூரில் தமிழ்நாடு காய்கறி லாரிக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட கார்கள் முழுவதுமாக டித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், வன்முறையாட்டத்தின் உச்சகட்டமாக பனிமனையில் நிறுத்திவைக் கப்பட்டிருந்த 65 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.  nakkheeran,in

கருத்துகள் இல்லை: