
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடிகளை சமாளிக்கும் விதமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைவதாக அறிவித்துள்ளன. இரு நிறுவனங்கள் இணைவதால் இந்திய தொலைத் தொடர்பு துறையில் புதிய ஒருங்கிணைப்பாக இது கருதப்படுகிறது. .
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதன் மூலம் அந்நிறுவனங்களின் மொத்த மதிப்பு சுமார் 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அதேசமயம், இரு நிறுவனங்களுக்கும் சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஏர்டெல் 25 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. வோடோபோன் நிறுவனத்திற்கு 20 கோடி வாடிக்கையாளர்களும் ஐடியா நிறுவனத்திற்கு 17.5 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர். தற்போது ரிலையன்ஸ், ஏர்செல் இணைப்பின் மூலம் 19 கோடி வாடிக்கையாளர்களுடன் மூன்றாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் இவை திகழும்.
Read more at:/tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக