
செல்போன்களிலும் பயன்பாட்டு மொழிகளில் ஒன்றாக இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொது மக்களுக்கு செல்போன் மூலம் கொண்டு சேர்க்க
வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக செல்போனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் 2 முறை ஆலோசனை நடத்தினர்.
இதன்படி இந்தியாவில் தயார் செய்யப்படும்
அனைத்து செல்போன்களிலும் பயன்பாட்டு மொழிகளில் ஒன்றாக இந்தி
கட்டாயமாக்கப்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும்
இரண்டு உள்ளூர் மொழியின் பயன்பாடும் தேவை என மத்திய அரசு சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் அருணா
சுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஆனால் உள்ளூர் மொழிகளை சேர்க்க அவகாசம் தேவை என செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் கோரியுள்ளதாகத் தெரிகிறது. தினமணி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக