வெள்ளி, 16 செப்டம்பர், 2016

சசிகலா புஷ்பா மேல் முறையீடு!

அதிமுக உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற
உறுப்ப்பினரான சசிகலா புஷ்பாவின் வீடு தூத்துக்குடியில் உள்ளது .சில நாட்களுக்கு முன் மதுரை போலீசார் அவர் மீதும் அவரின் கணவர்,தாயார்,மகன் பேரிலும் வீட்டிலல் வேலை பார்த்த பெண்களை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியதாக கூறி வழக்கு பதிவு செய்தனர்.
அதனையொட்டி சசிகலா புஷ்பா தரப்பில் முன்ஜாமின் கோரி மதுரை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த கிளை உயர்நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.இது குறித்து சசிகலா புஷ்பாவை தொடர்பு கொண்ட பொழுது அவர் கூறியதாவது ;

''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் மேலதிகாரத்து சொல் பேச்சு கேட்டும் போலீசார் என் மீதும் என் குடும்பத்தார் மீஏதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சட்டத்தின் மூலமாகவே அவையாவும் அபத்தமென நிரூபிப்பேன்.மதுரை கிளை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்'' எனவும்.''இந்த அவதூறு வழக்கை சட்டப்படி எப்படி எதிர்கொள்வது என வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக''வும் கூறினார்.தனது பதவிக் காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் மீதம் உள்ளதாகவும் அதை வகித்தே தீருவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: